ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
November 16th, 10:15 am
100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துஸ்தான் டைம்ஸ் வணக்கத்திற்குரிய பாபுவால் தொடங்கப்பட்டது . அவர் குஜராத்தி மொழி பேசுபவர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குஜராத்தியை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துடன் தொடர்புடைய அனைவருக்கும், இதை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டவர்களுக்கும், உறுதியாக நின்றவர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இன்று பாராட்டுக்கு உரியவர்கள், மரியாதைக்குரியவர்கள். 100 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள், எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 ஆண்டு பயணத்தை காண்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு நேரம் இருந்தால் புறப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அங்கு செலவிடுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். இது வெறும் கண்காட்சி அல்ல, ஒரு அனுபவம். 100 வருட வரலாறு என் கண் முன்னே கடந்து போனது போல் உணர்ந்தேன். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் செய்தித்தாள்களைப் பார்த்தேன். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்றவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி வந்தனர். அவர்களின் எழுத்துக்கள் செய்தித்தாளை மிகவும் வளப்படுத்தின. உண்மையிலேயே, நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக போராடுவது முதல் சுதந்திரத்திற்குப் பிறகு எல்லையற்ற நம்பிக்கையின் அலைகளில் சவாரி செய்வது வரை, இந்தப் பயணம் அசாதாரணமானது மற்றும் நம்பமுடியாதது. 1947 அக்டோபரில் காஷ்மீரை இணைத்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் அடைந்த உற்சாகத்தை உங்கள் பத்திரிகையில் நான் உணர்ந்தேன். ஏழு தசாப்தங்களாக காஷ்மீர் எவ்வாறு வன்முறையில் மூழ்கியிருந்தது, முடிவெடுக்க முடியாத தன்மை எவ்வாறு இருந்தது என்பதையும் அந்தத் தருணத்தில் நான் உணர்ந்தேன். இன்று உங்கள் செய்தித்தாள் ஜம்மு-காஷ்மீரில் சாதனை வாக்குப்பதிவு பற்றிய செய்திகளை வெளியிடுகிறது, இது கடந்த காலத்திலிருந்து கடுமையாக வேறுபடுகிறது.புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 16th, 10:00 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 ஆண்டுகால பயணத்திற்காக மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். கண்காட்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட திரு மோடி, இது ஒரு அனுபவம் என்று கூறினார். இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தின் பழைய செய்தித்தாள்களை தாம் பார்த்ததாகவும் அவர் கூறினார். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற பல தலைவர்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு கட்டுரைகள் எழுதியதை திரு மோடி சுட்டிக்காட்டினார். சுதந்திரப் போராட்டத்தைக் கண்ட நீண்ட பயணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபெற்றது தனித்துவமானது மற்றும் ஆச்சரியமானது என்று அவர் கூறினார். 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது குறித்த செய்தியைப் படிக்கும்போது மற்ற குடிமக்களைப் போலவே தாமும் அதே உற்சாகத்தை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். எவ்வாறாயினும், ஏழு தசாப்தங்களாக காஷ்மீரை எவ்வாறு முடிவெடுக்க முடியாத தன்மை வன்முறையில் மூழ்கடித்துள்ளது என்பதையும், அந்தத் தருணத்தில் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இப்போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். பிரபலமாக விளங்கும் மற்றொரு நாளிதழ், அதன் ஒரு பக்கத்தில் அசாம் கலவரப் பகுதி என்று அறிவிக்கப்பட்டதாகவும், மறுபுறம் அடல் ஜி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிக்கல் நாட்டினார் என்ற செய்தி வெளியிட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதில் இன்று பாஜக பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.We are laying a strong foundation for India's next thousand years: PM Modi in Austria
July 10th, 11:00 pm
PM Modi addressed the Indian community in Vienna. He spoke about the transformative progress achieved by the country in the last 10 years and expressed confidence that India will become the third largest economy in the near future, on its way to becoming a developed country - Viksit Bharat - by 2047.ஆஸ்திரியாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை
July 10th, 10:45 pm
வியன்னாவில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமருக்கு உற்சாகமான மற்றும் சிறப்பான வரவேற்பை அவர்கள் வழங்கினார்கள். ஆஸ்திரிய மத்திய தொழிலாளர் மற்றும் பொருளாதார அமைச்சர் மேதகு திரு மார்ட்டின் கோச்சரும் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.Bengal's enthusiasm for democracy is commendable: PM in Malda Uttar
April 26th, 11:15 am
Prime Minister Narendra Modi addressed a huge public gathering in Malda Uttar, West Bengal. He urged people to participate in the ongoing elections. PM Modi emphasized the importance of every vote in strengthening democracy and upholding the Constitution.PM Modi addresses a public meeting in Malda Uttar, West Bengal
April 26th, 10:46 am
Prime Minister Narendra Modi addressed a huge public gathering in Malda Uttar, West Bengal. He urged people to participate in the ongoing elections. PM Modi emphasized the importance of every vote in strengthening democracy and upholding the Constitution.பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 23rd, 09:20 am
பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பராக்கிரம தினத்தையொட்டி ஜனவரி 23 அன்று செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
January 22nd, 05:56 pm
செங்கோட்டையில் ஜனவரி 23 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பராக்கிரம தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.புதுதில்லியில் ஆதீனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 27th, 11:31 pm
பல்வேறு ஆதீனங்களுடன் தொடர்புடைய மதிப்பிற்குரிய துறவிகளாகிய உங்களை முதலில் வணங்குகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பதை பெரும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நாளை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆசி வழங்கவிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் நிறுவும் முன், பிரதமர் ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.
May 27th, 09:14 pm
நாளை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சிக்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 12th, 11:00 am
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் அவர்களே, ஆரிய பிரதிநிதி சபையின் சர்வதேசத் தலைவர் திரு சுரேஷ் சந்திர ஆரியா அவர்களே, தில்லி ஆரிய பிரதிநிதி சபையின் தலைவர் திரு தரம்பால் ஆரியா அவர்களே, திரு வினய் ஆரியா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான கிஷன்ரெட்டி அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, அர்ஜுன் ராம் மெக்வால் அவர்களே, பிரதிநிதிகளே, சகோதர சகோதரிகளே!புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 12th, 10:55 am
மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில் நினைவு இலச்சினை சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் அளித்த பதிலுரையின் தமிழாக்கம்
February 09th, 02:15 pm
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எனது பணிவான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றிய போது, வளர்ந்த இந்தியாவுக்கான பார்வையையும், வளர்ந்த இந்தியாவின் தீர்மானங்களுக்கான செயல் திட்ட வரைபடத்தையும் வழங்கினார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமரின் பதிலுரை
February 09th, 02:00 pm
குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். குடியரசுத் தலைவர் தமது உரையில் வளர்ந்த இந்தியா என்னும் தொலைநோக்கை அறிவித்து இரு அவைகளுக்கும் வழிகாட்டியுள்ளதாக பிரதமர் தமது உரையை தொடங்கினார்.தில்லியின் கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படை அணிவகுப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 28th, 09:51 pm
நாட்டின் 75-வது சுதந்திர தினத்துடன் இணைந்து, தேசிய மாணவர் படையும் தனது 75-வது ஆண்டை தற்போது கொண்டாடி வருகிறது. தேச கட்டமைப்பில் பல ஆண்டுகளாக பங்களித்து வரும் தேசிய மாணவர் படை வீரர்களைப் பாராட்டுகிறேன். தேசிய மாணவர் படை வீரர்களாகவும், நாட்டின் இளைஞர்களாகவும் ‘அமிர்த’ தலைமுறையைச் சார்ந்தவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த தலைமுறை, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதோடு, வளர்ந்த நாடாகவும், தற்சார்பு இந்தியாவாகவும் மாற்றும்.கரியப்பா மைதானத்தில் என்சிசி அணிவகுப்பில் பிரதமர் உரை
January 28th, 05:19 pm
தில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த ஆண்டு, என்சிசி அதன் 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வின் போது, என்சிசி-யின் வெற்றிகரமான 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், சிறப்பு தின உறை மற்றும் 75 ரூபாய் மதிப்பிலான பிரத்யேக நாணயத்தை பிரதமர் வெளியிட்டார். கன்னியாகுமரி முதல் தில்லி வரையில் எடுத்துவரப்பட்ட ஒற்றுமைச் சுடர் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டு கரியப்பா மைதானத்தில் ஏற்றப்பட்டது. இந்த அணிவகுப்புப் பேரணியானது இரவு மற்றும் பகல் என இருவேளைகளைக் கொண்ட கலப்பு நிகழ்வாக நடத்தப்பட்டதுடன், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் கருப்பொருளில் கலாச்சார நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றது. வசுதைவ குடும்பகம் எனப்படும் உலகம் ஒரே குடும்பம் என்ற உண்மையான இந்திய உணர்வுடன், 19 வெளிநாடுகளைச் சேர்ந்த 196 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மரியாதை செலுத்துவதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 08:03 pm
நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களை அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு சூட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 23rd, 11:01 am
நாட்டின் உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களே, அந்தமான் & நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர், ராணுவ தளபதி மற்றம் முப்படைகளின் தலைவர்கள், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், மற்றும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் ஆகிய அனைவருக்கும் வணக்கம்.அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரில்லாத 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
January 23rd, 11:00 am
பராக்ரம தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார்.பராக்ரம தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரதமர் மரியாதை
January 23rd, 09:01 am
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான இன்று கொண்டாடப்படும் பராக்ரம தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.