டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 28th, 08:00 pm

டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 28th, 06:53 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் பொதுவான மனிதரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி

டிஜிட்டல் தொழில்நுட்பம் பொதுவான மனிதரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி

July 09th, 05:35 pm

பிரதமர் மோடி மற்றும் கொரியக் குடியரசின் அதிபர் மூன் ஜே-இன்-னும் நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் பெரிய அளவு செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையைக் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். தென் கொரியா போன்ற நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் கைப்பேசி உற்பத்தி ஆலைகளின் முதலீடுகள் ஒரு அடித்தளமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். கைப்பேசிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்

பிரதமரும் கொரிய அதிபரும் நொய்டாவில் செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தனர்

July 09th, 05:34 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி கொரியக் குடியரசின் அதிபர் திரு. மூன் ஜே-இன்-னும் இன்று (09.07.2018) நொய்டாவில் சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் பெரிய அளவு செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை கூட்டாக தொடங்கி வைத்தனர்.