ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

December 05th, 11:10 am

ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரதமருடன் நாகாலாந்து முதலமைச்சர் சந்திப்பு

August 09th, 02:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று நாகாலாந்து முதலமைச்சர் திரு நெபியூ ரியோவை சந்தித்தார்.

நாகாலாந்து முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

December 19th, 02:17 pm

நாகாலாந்து முதலமைச்சர் திரு. நெய்பியூ ரியோ, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமருடன் நாகலாந்து முதலமைச்சர் சந்திப்பு

March 13th, 06:33 pm

நாகலாந்து முதலமைச்சர் திரு.நெய்ஃபியூ ரியோ பிரதமர் திரு.நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

முக்கிய துறைகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 07th, 04:00 pm

இணைப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சிப் பணிகளுக்காக நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.