என்டீடிவி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
October 21st, 10:25 am
கடந்த 4-5 ஆண்டுகளை நாம் பார்த்தால், ஒரு பொதுவான கருப்பொருள் பெரும்பாலான விவாதங்களில் மையமாக உள்ளது. கவலை - எதிர்காலத்தைப் பற்றிய கவலை. கொரோனா காலத்தில், உலகளாவிய தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்ற கவலை இருந்தது. கோவிட் பரவியதால், உலகப் பொருளாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்தன. தொற்றுநோயானது பணவீக்கம், வேலையின்மை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய கவலைகளை அதிகரித்தது. பின்னர், ஏற்பட்ட போர்கள் விவாதங்களையும் கவலைகளையும் தீவிரப்படுத்தின. உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் அப்பாவி உயிர்களின் இழப்பு குறித்து கவலை இருந்தது. இந்தப் பதட்டங்கள், மோதல்கள் மற்றும் அழுத்தங்கள் உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் தலைப்புகளாக மாறின. உலகளாவிய இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.புதுதில்லியில் என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 21st, 10:16 am
புதுதில்லியில் இன்று என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரமுகர்களையும் வரவேற்றதுடன், உலகளாவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள பல்வேறு துறை சார்ந்த முன்னோடிகள் தத்தமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.