ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை அமைப்பு ரீதியாக்கவும் பிரதமர் அழைப்பு
January 04th, 03:15 pm
ஆராய்ச்சிகள், மனித ஆன்மா போன்ற நிரந்தர நிறுவனத்தைப் போன்றது என பிரதமர் திரு.நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். ஆராய்ச்சி முடிவுகளை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளவும் , கண்டுபிடிப்புகளை அமைப்பு ரீதியாக்கவும் வகை செய்வதென்ற இரட்டைக் குறிக்கோளுடன் அரசு பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். தேசிய அளவியல் மாநாடு 2021-ல், தேசிய அணு கால அளவு மற்றும் பாரதீய நிர்தேஷக் திரவிய அமைப்பு ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த பிரதமர், தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகத்திற்கும் இன்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிப் பேசினார்.புதுதில்லியில் தேசிய அளவியல் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் முக்கிய அம்சங்கள்
January 04th, 11:01 am
பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய அளவியல் மாநாட்டு 2021-இல் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு துவக்க உரை ஆற்றினார். தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா பிரணாலி ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வுக்கான அடிக்கல்லையும் காணொலி வாயிலாக அவர் நாட்டினார். தனது 75 ஆவது ஆண்டுக்குள் நுழையும் புதுதில்லியின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம்- தேசிய இயற்பியல் ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என்பிஎல்) இந்த மாநாட்டை நடத்தியது. ‘நாட்டின் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு அளவியல்' என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.தேசிய அளவியல் மாநாட்டில் பிரதமர் துவக்க உரையாற்றினார்
January 04th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய அளவியல் மாநாட்டு 2021-இல் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு துவக்க உரை ஆற்றினார். தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா பிரணாலி ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வுக்கான அடிக்கல்லையும் காணொலி வாயிலாக அவர் நாட்டினார். தனது 75 ஆவது ஆண்டுக்குள் நுழையும் புதுதில்லியின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம்- தேசிய இயற்பியல் ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என்பிஎல்) இந்த மாநாட்டை நடத்தியது. ‘நாட்டின் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு அளவியல்' என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.சர்தார் வல்லபாய் படேல் உயிரியல் பூங்காவை தொடங்கி வைத்தார் பிரதமர்
October 30th, 06:43 pm
குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், சர்தார் படேல் தேசிய உயிரியல் பூங்கா, பிரம்மாண்ட பறவை கூண்டு ஆகியவற்றை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கெவாடியா ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் மற்றும் 4 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.