பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பிரதமர் நவம்பர் 15 அன்று பீகார் செல்கிறார்
November 13th, 06:59 pm
பழங்குடியினர் கௌரவ தினத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 15 அன்று பீகார் மாநிலம் ஜமுய் செல்கிறார். இது நிலத்தின் தந்தை பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலை 11 மணியளவில், பகவான் பிர்சா முண்டாவின் நினைவாக நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் வெளியிடுவார். பழங்குடியின சமூகங்களை மேம்படுத்தவும், பிராந்தியத்தின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட ரூ.6,640 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 18th, 04:40 pm
திரிபுரா மாநிலத்தின் ஆளுநர் திரு சத்தியதேவ் நாராயண் ஆர்யா, மாநில முதல்வர் திரு மாணிக் சாகா, எனது அமைச்சரவை சகாக்களான பிரதிமா பௌமிக், திரிபுரா சட்டமன்றத்தின் சபாநாகர் திரு ரத்தன் சக்கரபோர்த்தி, துணை முதல்வர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, எனது நண்பரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு பிப்லப் தேவ், திரபுரா மாநில மதிப்புமிக்க அமைச்சர்கள் மற்றும் எனது அருமை திரிபுரா மக்கள்! ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
December 18th, 04:29 pm
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கான கிரஹ பிரவேஷ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.3400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த வீடுகள், 2 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளைச் சென்றடையும். சாலை இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அகர்தலா நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் அகர்தலா புறவழிச்சாலை (காயர்பூர் - அம்தாலி) NH-08ஐ விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 230 கிமீ நீளமுள்ள 32 சாலைகளுக்கும், 540 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள 112 சாலைகளை மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஆனந்த்நகர் மற்றும் அகர்தலா அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டையும் பிரதமர் திறந்து வைத்தார்.சமூக வலைதள மூலை 17 செப்டெம்பர் 2017
September 17th, 07:33 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சர்தார் படேலின் முயற்சியினால் தான் “ஒரே பாரதம், வளமான பாரதம்” என்னும் கனவை நம்மால் நனவாக்க முடிகிறது” : பிரதமர் மோடி
September 17th, 12:26 pm
இன்று குஜராத்தில் உள்ள தபோய்-ல் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் இன்று நாட்டினார். ”அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்”, என பிரதமர் கூறினார்.சர்தார் சரோவர் அணைக்கட்டை நாட்டிற்கு அர்பணித்த பிரதமர் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
September 17th, 12:25 pm
இன்று குஜராத்தில் உள்ள தபோய்-ல் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் இன்று நாட்டினார். ”அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்”, என பிரதமர் கூறினார்.