புதுதில்லியில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப தின விழாவில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
May 11th, 11:00 am
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது சக ஊழியர்களான திரு ராஜ்நாத் சிங் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் எனது இளம் சக ஊழியர்களே, இந்திய வரலாற்றின் பெருமைமிகு நாட்களில் இன்றைய நாளும் ஒன்று. இந்த நாளில் தான் இந்திய அறிஞர்கள் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்திய குடிமகன் ஒவ்வொருவரையும் பெருமை பட வைத்தனர். அடல் பிகாரிப் வாஜ்பாய், இந்தியாவின் அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றதை இந்த நாளில் அறிவித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பொக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியாவின் அறிவியல் வல்லமையை நிரூபித்ததுடன், உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய அடையாளத்தையும் நிலை நிறுத்தியது. “நாம் நமது பயணத்தை நிறுத்தவில்லை நமது வழியில் வரும் எந்தவொரு சவால்களுக்கும் அடிபணிந்ததில்லை” என்ற அடல் பிகாரி வாஜ்பாய்-ன் வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்.தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மே 11 அன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்
May 11th, 10:30 am
தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 11 அன்று புதுதில்லி, பிரகதி மைதானத்தில் தொடங்கிவைத்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் மே 11-ல் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுவதையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரூ.5800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் அறிவியல் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் பிரதமரின் தற்சார்பு இந்தியா நோக்கத்தை அடையும்வகையில் இது அமைந்துள்ளது.தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை மே 11-ந் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
May 10th, 03:25 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி தேசிய தொழில்நுட்பத் தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை மே 11-ந் தேதி புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்கிறார். தேசிய தொழில்நுட்பத் தினத்தின் 25-வது ஆண்டை கொண்டாடும் வகையில் மே 11-ந் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.5800 கோடி மதிப்பிலான பல்முனை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
May 11th, 09:29 am
நமது அறிவார்ந்த விஞ்ஞானிகளுக்கும் 1998-ல் வெற்றிகரமான பொக்ரான் அணுவெடிப்பு சோதனைகளுக்கு வழிவகுத்த அவர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மரியாதை
May 11th, 11:59 am
தேசிய தொழில்நுட்ப தினத்தன்று, விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்பத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.Prime Minister pays tributes to scientists on the National Technology Day
May 11th, 04:35 pm
Prime Minister Shri Narendra Modi today paid tributes to all the scientists in the country who are using science and technology to bring a positive difference in the lives of others.PM greets citizens on National Technology Day
May 11th, 09:38 am