தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மேஜர் தியான் சந்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

August 29th, 10:25 am

இன்று தமது டிவிட்டர் செய்தியில், விளையாட்டுகளுக்கு பேரார்வத்துடன் பங்களிப்பு செய்தவர்களையும், உலக அரங்கில் பெருமிதத்துடன் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்த அனைவரையும் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Prime Minister greets all sportspersons on National Sports Day

August 29th, 08:54 am

The Prime Minister, Shri Narendra Modi has greeted all sportspersons on National Sports Day.

உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம்

January 02nd, 01:01 pm

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

January 02nd, 01:00 pm

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.

இந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

August 29th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.

பாரா ஒலிம்பிக் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாவனா படேலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

August 29th, 09:06 am

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாவனா படேலுக்கு பிரதமர், திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து: மேஜர் தியான் சந்த் அவர்களுக்கு அஞ்சலி

August 29th, 10:34 am

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திரமோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற இந்திய ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் அவர்களுக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

Fitness is not just a word but a pre-condition for healthy and fulfilling life: PM Modi

August 29th, 10:01 am

PM Narendra Modi launched the FIT India movement today. Speaking at the event, PM Modi said, A fit mind in a fit body is important. PM Modi further said lifestyle diseases are on the rise due to lifestyle disorders and we can ensure we don't get them by being fitness-conscious. The Prime Minister also urged people to make the FIT India movement a Jan Andolan.

கட்டுடல் இந்தியா இயக்கம், பிரதமர் துவக்கி வைத்தார்

August 29th, 10:00 am

தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுடல் இந்தியா இயக்கத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி துவக்கி வைத்தார். தங்களது வாழ்வியல் முறையை, உடல் உறுதியான வாழ்க்கை முறையாக உருவாக்க வேண்டும் என நாட்டு மக்களை பிரதமர் வலியுறுத்தினார்.

இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் 3-ம் முறையாக 25.08.2019 அன்று பிரதமர் ஆற்றிய உரை

August 25th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய தேசம் இப்போது, ஒரு பக்கம் மழையளிக்கும் இன்பத்தை அனுபவித்து வருகிறது. அதே வேளையில், மற்றொரு பக்கம் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் உற்சவங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என தீபாவளி வரை அனைத்தும் நடக்கின்றன; எந்த ஒரு சூழ்நிலையிலும், சமூகத்தில் எப்போதும் ஒரு மந்தநிலை என்பதே இருக்க கூடாது என்ற வகையில், நம்முடைய முன்னோர்கள் பருவ சுழற்சி, பொருளாதார சுழற்சி மற்றும் சமூக வாழ்க்கை என்ற அமைப்பை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு ஆர்வலர்களுக்கு பிரதமர் வாழ்த்து

August 29th, 09:42 am

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு ஆர்வலர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்; புகழ்பெற்ற ஹாக்கி வீரரான மேஜர் தியான் சந்துக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்

August 29th, 11:06 am

”தேசிய விளையாட்டு தினத்தில், உற்சாகமும் ஆர்வமும் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது திறமையின் மூலம் சாதனைகளை புரிந்த புகழ்பெற்ற ஹாக்கி வீரரான மேஜர் தியான் சந்துக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். …. விளையாட்டு என்பது உடல் வலைமை, மன வலிமை மற்றும் ஆளுமைப் பண்புகளை அதிகரிப்பது ஆகும்” - பிரதமர் நரேந்திர மோடி.