விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)

August 25th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

விண்வெளி உலகில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: பிரதமர்

August 23rd, 12:00 pm

விண்வெளி உலகில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

முதலாவது தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

August 23rd, 09:39 am

முதலாவது தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விண்வெளித் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

போலந்து தலைநகர் வார்சாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 21st, 11:45 pm

இந்த காட்சி உண்மையிலேயே அற்புதமானது. உங்கள் உற்சாகம் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இங்கு காலடி எடுத்து வைத்த கணத்திலிருந்து நீங்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் போலந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் உணவு வகைகளைக் கொண்டவர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருவரும் இந்தியத்தன்மை என்ற உணர்வால் இணைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான வரவேற்பை அளித்துள்ளீர்கள். இந்த வரவேற்புக்காக உங்கள் அனைவருக்கும், போலந்து மக்களுக்கும் நான் நன்றி கூறிகிறேன்.

PM Modi addresses Indian community in Warsaw, Poland

August 21st, 11:30 pm

Prime Minister Narendra Modi addressed the Indian Diaspora in Warsaw, Poland. The PM expressed that India's current global strategy emphasizes building strong international relationships and fostering peace. India’s approach has shifted to actively engaging with each nation. The focus is on enhancing global cooperation and leveraging India’s historical values of unity and compassion.

கேரள மாநிலம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 27th, 12:24 pm

கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது சகாவும் இணையமைச்சருமான திரு வி. முரளீதரன் அவர்களே, இஸ்ரோ குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, அனைவரும் வணக்கம்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்

February 27th, 12:02 pm

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எஸ்.எல்.வி ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் புதிய 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின், நிலைப் பரிசோதனை வசதி, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 'டிரைசோனிக் காற்றியல் சுரங்கம்' ஆகியவை அடங்கும். ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த திரு மோடி, நான்கு விண்வெளி வீரர்களுக்கு 'விண்வெளி வீரர் பதக்கங்களை' வழங்கினார். குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 26th, 04:12 pm

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை

September 26th, 04:11 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

சந்திரயான் -3 திட்டத்தின் வரலாற்று வெற்றிக் கொண்டாட்டம் குறித்த மத்திய அமைச்சரவை தீர்மானம்

August 29th, 04:00 pm

நிலவுக்கு சந்திரயான் -3 திட்டத்தின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடுவதில் மத்திய அமைச்சரவை நாட்டு மக்களுடன் இணைகிறது. நமது விஞ்ஞானிகளின் மகத்தான சாதனையையும் அமைச்சரவை பாராட்டுகிறது. இது நமது விண்வெளி நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஏற்றத்தின் பிரகாசமான அடையாளமாகும். ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுவதை அமைச்சரவை வரவேற்கிறது.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 26th, 08:15 am

இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் ஒரு புதிய வகையான மகிழ்ச்சியை உணர்கிறேன். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் அத்தகைய மகிழ்ச்சியை உணரலாம். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தேன், பின்னர் கிரிசில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. எனவே நான் அங்கு இருக்க வேண்டியிருந்தது. ஆனால் என் மனம் முழுவதும் உங்கள் மீது இருந்தது. நீங்கள் அதிகாலையில் இங்கே இருக்க வேண்டும், ஆனால் நான் வந்து உங்களுக்கு மரியாதை அளிக்க விரும்பினேன். இது உங்களுக்கு அசௌகரியமாக இருந்திருக்கலாம், ஆனால் நான் இந்தியாவில் தரையிறங்கியவுடன் உங்களைப் பார்க்க விரும்பினேன். நான் உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்த விரும்பினேன், உங்கள் கடின உழைப்பை வணங்கினேன், உங்கள் பொறுமைக்கு வணக்கம் செலுத்தினேன், உங்கள் ஆர்வத்தை வணங்கினேன், உங்கள் உயிர்ப்புக்கு வணக்கம் செலுத்தினேன், உங்கள் ஆன்மாவுக்கு வணக்கம் செலுத்தினேன். நீங்கள் நாட்டை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறீர்களோ அது சாதாரண வெற்றி அல்ல. எல்லையற்ற விண்வெளியில் இந்தியாவின் அறிவியல் திறனின் பிரகடனம் இது.

சந்திரயான்-3 வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே பிரதமர் உரை

August 26th, 07:49 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிலிருந்து வந்த உடன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொலை கண்காணிப்பு மற்றும் கட்டளைக் கட்டமைப்பான இஸ்ட்ராக்-கைப் (ISRO Telemetry Tracking and Command Network - ISTRAC) பார்வையிட்டு, சந்திரயான் -3-ன் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே உரையாற்றினார். சந்திரயான் -3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார். அங்கு சந்திரயான் -3 திட்டத்தின் புதிய தகவல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.