இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
December 16th, 01:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறைத் தலைவர்களின் 59-வது அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
December 01st, 07:49 pm
நிறைவு விழாவில், சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்களை புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் வழங்கினார். தமது நிறைவுரையில், பாதுகாப்பு சவால்களின் தேசிய மற்றும் சர்வதேச பரிமாணங்கள் குறித்து மாநாட்டின் போது விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், விவாதங்களிலிருந்து வெளிப்பட்ட எதிர் உத்திகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.புவனேஸ்வரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
November 29th, 09:54 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் அமைந்துள்ள மாநில மாநாட்டு மையத்தில் 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறவுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.ஜெர்மனி பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 25th, 01:50 pm
முதலாவதாக, இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸையும் அவரது தூதுக்குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியா வந்துள்ள உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.ஜமைக்கா பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கை
October 01st, 12:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹோல்னெஸ் மற்றும் அவரது குழுவினரை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அதனால்தான் இந்தப் பயணத்துக்கு நாம் விசேஷ முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவின் நீண்டகால நண்பர். அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு முறையும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாட்டை நான் உணர்ந்தேன். அவரது வருகை நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய சக்தியைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த கரீபியன் பிராந்தியத்துடனும் நமது ஈடுபாட்டை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.A free, open, inclusive and prosperous Indo-Pacific is our shared priority and commitment: PM Modi
September 22nd, 02:30 am
In his address at the QUAD Summit, PM Modi underscored the alliance's significant progress since 2021 under President Biden's leadership, highlighting its crucial role in promoting a rules-based international order, respect for sovereignty, and peaceful conflict resolution amidst global tensions. He reaffirmed QUAD’s shared commitment to a free, open, inclusive, and prosperous Indo-Pacific. PM Modi also announced that India will host the QUAD Leaders' Summit in 2025.கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 01st, 09:43 am
கடலோரக் காவல்படை தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல்படை வீரர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 21st, 12:13 pm
அதிபர் விக்கிரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு இன்று நிறைவு பெறுகிறது. இந்த தருணத்தில், நம் அனைவரின் சார்பிலும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஓராண்டு இலங்கை மக்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் எப்போதும் போல, இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம். இந்த சவாலான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொண்ட இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பறிமுதல் செய்யப்பட்ட 1,44,000 கிலோ போதைப்பொருளை அழித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலுக்குப் பிரதமர் பாராட்டு
July 17th, 10:21 pm
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தனது ட்விட்டரில், இந்த சாதனையின் மூலம், ஒரே ஆண்டில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 1 மில்லியன் கிலோ போதைப்பொருட்களை அழித்து இந்தியா வியக்கத்தக்க சாதனையை எட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
April 01st, 08:36 pm
பாதுகாப்புப் படைத் தளபதிகளின் மூன்று நாள் மாநாட்டின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன, இதில் ஆயுதப்படைகள் இணைந்து செயல்படுதல் முக்கியமானதாகும். தற்சார்பை அடைவதற்காக ஆயுதப் படைகளின் தயார் நிலை, பாதுகாப்பு சூழல் அமைப்பில் முன்னேற்றம் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 18th, 11:17 pm
இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மின்னணு வாயிலாக இணைந்துள்ள கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளான 'இந்தியாவின் தருணம்' எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இது உண்மையிலேயே இந்தியாவின் தருணம் என்ற குரலை இது எதிரொலிக்கிறது. அதே நம்பிக்கையை இந்தியா டுடே குழுமம் பிரதிபலிப்பது இந்தக் குரலை மேலும் சிறப்பானதாக்குகிறது.இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் உரை
March 18th, 08:00 pm
புது தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.ஆஸ்திரேலிய பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 10th, 12:50 pm
முதன்முறையாக அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரதமர் அல்பனீஸ் அவர்களை மனமார வரவேற்கிறேன். பிரதமர்கள் அளவில் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்த கடந்த ஆண்டு இரு நாடுகளும் முடிவு செய்தன. பிரதமர் அல்பனீஸின் வருகையால் இந்த திட்டம் தொடங்கியுள்ளது.ரூ.4800 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
February 15th, 03:51 pm
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் “எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022-23 முதல் 2025-26 வரை இத்திட்டத்திற்கு ரூ.4800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது."ஆப்கானிஸ்தான் தொடர்பான தில்லி பிராந்திய பாதுகாப்பு உரையாடலில்" கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் / பாதுகாப்பு கவுன்சில்களின் செயலாளர்கள் பிரதமரை சந்தித்தனர்
November 10th, 07:53 pm
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் இன்று நடத்திய ஆப்கானிஸ்தான் தொடர்பான பிராந்திய பாதுகாப்பு உரையாடலுக்காக தில்லி வந்துள்ள ஏழு நாடுகளின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர்கள், பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பிரதமர் திரு நரேந்திர மோடியை கூட்டாக சந்தித்தனர்.18-வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
October 28th, 12:35 pm
இந்த ஆண்டும் நம்மால் நமது பாரம்பரிய குடும்பப் புகைப்படத்தை எடுக்க முடியவில்லை. ஆனால், காணொலி மூலம் ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை பேணியுள்ளோம். 2021-ம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைவராக விளங்கும் புருனேயின் மாட்சிமை மிக்க சுல்தானை நான் வாழ்த்துகிறேன்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றார்
September 17th, 05:21 pm
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டத்தில் காணொலி மூலமும், ஆப்கானிஸ்தான் குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு-சிஎஸ்டிஓ கூட்டு அமர்வில் காணொலி செய்தி மூலமும் பிரதமர் பங்கேற்றார்.ஆப்கானிஸ்தான் குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) உச்சிமாநாட்டில் பிரதமரின் உரை
September 17th, 05:01 pm
ஆப்கானிஸ்தான் குறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) ஆகியவற்றுக்கிடையேயான உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததற்காக அதிபர் ரஹ்மோனுக்கு நன்றி தெரிவித்து எனது உரையை தொடங்குகிறேன்.75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 03:02 pm
இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.75-ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரை
August 15th, 07:38 am
75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியா மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.