செப்டம்பர் 17 அன்று பிரதமர் மத்தியப்பிரதேசத்திற்கு பயணம்

September 15th, 02:11 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 17 அன்று மத்தியப்பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வார். அன்று காலை 10.45 மணி அளவில், குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி விடுவிப்பார். இதன் பிறகு நண்பகல் வாக்கில் ஷியோபூரின் கரஹாலில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களும் சமூக ஆதாரவள நபர்களும் பங்கேற்கும் மகளிர் சுயஉதவிக் குழு மாநாட்டில் அவர் பங்கேற்பார்.

சுயசார்பு மகளிர் சக்தியுடன் (“ஆத்மநிர்பர் நாரிசக்தி சே சம்வாத்” ) மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

August 12th, 12:32 pm

நாடு சுதந்திரம் பெற்ற பவளவிழாவைக் கொண்டாடும் போது இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. அடுத்த சில ஆண்டுகளில் சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு மகளிர் சக்தி ஒரு புதிய ஆற்றலை உருவாக்கும். உங்களுடன் பேசியது இன்று என்னை உற்சாகப்படுத்தியது. இன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரவையிலிருந்து எனது சகாக்கள், மதிப்பிற்குரிய ராஜஸ்தான் முதலமைச்சர், மாநில அரசுகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் (மாவட்ட கவுன்சில்கள்), நாட்டின் சுமார் 3 லட்சம் இடங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான சகோதரிகள் மற்றும் மகள்கள், மற்றும் பெரியோர்களே!

‘தற்சார்பு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் சுயஉதவிக் குழு பெண்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

August 12th, 12:30 pm

‘தற்சார்பு பெண்களுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, சுய உதவிக் குழு பெண்கள், தீன்தயாள் அந்தியோதயா திட்ட - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சமுதாய சேவையாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

தற்சார்பு பெண்சக்திகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆகஸ்ட் 12ம் தேதி பங்கேற்பு

August 11th, 01:51 pm

தற்சார்பு பெண்சக்திகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுவினர்கள் / தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) கீழ் உருவாக்கப்பட்ட சமுதாய சேவையாளர்கள் ஆகியோருடன், ஆகஸ்ட் 12-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.