நீடித்த வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பிரதமரின் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் திட்டம் மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைய கிரிஷோன்னதி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

October 03rd, 09:18 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வேளாண் மற்றும் விவசாயிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு பொறுப்பேற்கும் அனைத்து திட்டங்களையும் பிரதமரின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் திட்டம், உணவு விடுதி திட்டம் மற்றும் கிரிஷோன்னதி திட்டம் ஆகிய இரண்டு குடை திட்டங்களாக சீரமைப்பதற்கான வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் திட்டம் நீடித்த வேளாண்மையை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் கிரிஷோன்னதி திட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய தன்னிறைவு குறித்து பேசும். பல்வேறு கூறுகளின் திறமையான மற்றும் திறம்பட்ட அமலாக்கத்தை உறுதி செய்ய அனைத்து கூறுகளும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்.

2024-25 முதல் 2030-31 வரையிலான சமையல் எண்ணெய் – எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

October 03rd, 09:06 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை ஊக்குவிப்பது, சமையல் எண்ணெய் வகைகளில் தற்சார்பை (தற்சார்பு இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முன்முயற்சியான சமையல் எண்ணெய் – எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த இயக்கம் 2024-25 முதல் 2030-31 வரை ஏழு ஆண்டு காலப்பகுதியில் ரூ .10,103 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.