மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 29th, 12:45 pm

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிராவின் பிரபலமான முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களே, திரு அஜித் பவார் அவர்களே, புனேவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவையில் உள்ள எனது இளம் சகாவுமான திரு முரளிதர் அவர்களே, காணொலிக் காட்சி மூலம் இணைந்திருக்கும் இதர மத்திய அமைச்சர்களே, மகாராஷ்டிராவின் மூத்த அமைச்சர்களே, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்த நிகழ்வில் தொடர்புடைய அனைத்து சகோதர சகோதரிகளே!

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

September 29th, 12:33 pm

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இரண்டு நாட்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக புனேவில் தமது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் இன்றைய மெய்நிகர் நிகழ்வுக்கு வழவகுத்த தொழில்நுட்பத்தை அவர் பாராட்டினார். சிறந்த ஆளுமைகளுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த நிலம் மகாராஷ்டிரா வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைக் காண்கிறது என்று அவர் கூறினார். ஸ்வர்கேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவு தொடங்கப்பட்டதையும், புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட் – கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே முதல் பெண்கள் பள்ளியில் நினைவு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் அவர் பேசினார். புனேயில் வாழ்க்கையை எளிதாக்கும் நடைமுறைகளை அதிகரிப்பதில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றம் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு செப்டம்பர் 29 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

September 28th, 07:00 pm

மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 29 அன்று மதியம் 12:30 மணியளவில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் முனையங்கள் நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

August 28th, 05:46 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் 12 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நாட்டின் தொழில்துறை சூழலை மாற்றியமைக்க அமைக்கப்பட்டுள்ளது, இது தொழில்துறை முனைகள் மற்றும் நகரங்களின் வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறது, இது பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிக்கும்.