2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

June 07th, 05:35 pm

2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு (அக்டோபர் 2022-டிசம்பர்2022) மத்திய அரசு நீடித்துள்ளது

September 28th, 04:06 pm

2021-ல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டமான பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ் கூடுதல் உணவுப் பாதுகாப்பு வெற்றிகரமாக அமலாவதை அடுத்து இந்த திட்டத்தின் 7-வது கட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்க அமைச்சரவை ஒப்புதல்

April 08th, 03:58 pm

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் இந்திய அரசின் இதர நலத்திட்டங்களின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024-க்குள் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி குஜராத்தில் பிரமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் உரையாடல்

August 01st, 09:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தில் பிரமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் 2021 ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி மூலம் உரையாடுகிறார். இத்திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக. பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய நிகழ்வு இந்த மாநிலத்தில் துவக்கப்படுகிறது.