ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 11th, 05:00 pm

செங்கோட்டையில் இருந்து ஒரு விஷயத்தை நான் எப்போதும் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சியும் முக்கியம் என்று நான் கூறியுள்ளேன். இன்றைய பாரதம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் மூலமே துரித வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும். இந்த கொள்கைக்கு இன்று ஒரு உதாரணம் அமைந்துள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் இந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் இருக்கும் போதெல்லாம், புதிய நுண்ணறிவுகளைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு 21+ம் நூற்றாண்டு பாரதத்தைப் பார்ப்பதில் ஒரு தனித்துவமான கண்ணோட்டம் உள்ளது. அதனால்தான் உங்கள் தீர்வுகளும் தனித்துவமானவைகளாக இருக்கின்றன. இப்போது, இந்த ஹேக்கத்தானில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழுக்கள் என்ன பணியாற்றி வருகின்றன என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன். உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். எனவே, ஆரம்பிக்கலாம்!

நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்

December 11th, 04:30 pm

நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-இன் பிரமாண்ட நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரைகளில் 'அனைவரும் இணைவோம்' என்ற நடைமுறையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதை நினைவுபடுத்தினார். நவீன இந்தியா ஹேக்கத்தானின் மாபெரும் இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் என்று கூறிய பிரதமர், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் தான் இருக்கும்போது, புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் தனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து தாம் அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வித்தியாசமாகப் பார்க்கும் தொலைநோக்குப் பார்வையை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். எனவே, உங்கள் தீர்வுகளும் வேறுபட்டவை, ஒரு புதிய சவால் வரும்போது, நீங்கள் புதிய மற்றும் தனித்துவமான தீர்வுகளைக் கொண்டு வருகிறீர்கள் என்று திரு மோடி கூறினார். கடந்த காலத்தில் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த பிரதமர், ஹேக்கத்தான் போட்டிகளின் வெளியீடு குறித்து தான் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை என்றார். நீங்கள் எனது நம்பிக்கையை நீங்கள் வலுப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறிய அவர், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்வுகள் பல்வேறு அமைச்சகங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 08th, 10:46 am

காலம் மாறி, ஒரு புதிய சகாப்தம் உதயமாகும் போது, அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது தேசத்தின் கடமையாகும். இன்று இங்கே பாரத மண்டபத்தில் இந்தப் பொறுப்பை நாடு நிறைவேற்றி வருகிறது. முதல் தேசிய படைப்பாளிகள் விருது, வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இந்த விருது வரும் நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும். இந்த புதிய சகாப்தத்தை இயக்கும் இளைஞர்களை கௌரவிப்பதற்கும், படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கும், படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பு. இந்த விருது உள்ளடக்க படைப்பாளர்களுக்கு சிறந்த ஆதாரமாக செயல்படும். அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும். இன்று நான் தேசிய படைப்பாளிகள் விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அதில் முழு மனதுடன் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. அதனால், இந்த நிகழ்வை எங்களால் அதிகம் பிரபலப்படுத்த முடியவில்லை. குறைந்த நேர கால அளவிலும்கூட, சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் படைப்பாளிகளை இதில் ஈடுபடுத்த முடிந்தது.

முதல் தேசிய படைப்பாளர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

March 08th, 10:45 am

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதலாவது தேசிய படைப்பாளர் விருதுகளை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுடன் சிறிது நேரம் அவர் கலந்துரையாடினார். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.