இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்

December 16th, 04:25 pm

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத் அவர்களே, உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு. அமித் பாய் ஷா அவர்களே, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களே, குஜராத் முதல்வர் திரு. பூபேந்திர பாய் படேல் அவர்களே, உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, அனைத்து முக்கிய பிரமுகர்கள், மற்றும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திகழும் நாடு முழுவதும் உள்ள எனது ஆயிரக்கணக்கான விவசாய சகோதர சகோதரிகளே, இன்று நாட்டின் விவசாயத் துறைக்கு மிக முக்கியமான நாள். தேசிய இயற்கை வேளாண்மை மாநாட்டில்பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை நான் வலியுறுத்தினேன். வேளாண் அமைச்சர் தோமர் அவர்கள் தெரிவித்தபடி, தொழில்நுட்பம் மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சுமார் எட்டு கோடி விவசாயிகள் எங்களுடன் இணைந்துள்ளனர். எனது அனைத்து விவசாய சகோதர சகோதரிகளையும் வரவேற்கிறேன்.

இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில் விவசாயிகளிடம் பிரதமர் உரையாற்றினார்

December 16th, 10:59 am

இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில் விவசாயிகளிடம் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, திரு நரேந்திர சிங் தோமர், குஜராத் ஆளுநர், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 16-ந் தேதி தேசிய வேளாண் மற்றும் உணவுப்பதப்படுத்துதல் உச்சி மாநாட்டில் விவசாயிகளிடையே பிரதமர் உரையாற்றுகிறார்

December 14th, 04:48 pm

குஜராத் மாநிலத்தின் ஆனந்தில் டிசம்பர் 16-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கும் தேசிய வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் உச்சி மாநாட்டில் நிறைவு அமர்வில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றுவார். இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்தும் வகையில் உச்சிமாநாடு நடைபெறும். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை முறைகள், அவற்றை பின்பற்றுவதால் ஏற்படும் பயன்கள் குறித்த அனைத்து தேவையான தகவல்களும் அளிக்கப்படும்.