
India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi
August 03rd, 09:35 am
Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.
வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
August 03rd, 09:30 am
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நாடெங்கிலும் உள்ள இளம் புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் புதுத்தொழில் தொடங்கிய தொழில் முனைவோரிடம் பிரதமர் காணொலிப் பாலம் மூலம் கலந்துரையாடல்
June 06th, 11:15 am
நாடெங்கிலும் உள்ள இளம் புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் புதுத்தொழில் தொடங்கிய தொழில் முனைவோரிடம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (06.06.2018) காணொலிப் பாலம் மூலம் கலந்துரையாடினார். அரசுத் திட்டங்களின் பல்வேறு பயனாளிகளுடன் காணொலிப் பாலம் மூலமாக பிரதமர் கலந்துரையாடுவது இது நான்காவது முறையாகும்.மாண்புமிகு பிரதமர் திரு மால்கம் டர்ன்புல் அவர்களே, ஊடக நண்பர்களே, வணக்கம்!
April 10th, 02:15 pm
இந்தியாவுக்கு முதல் முறையாக வருகைதரும் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மாதம் பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கண்டு களித்தோம். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றியபோது, ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் வீரர் பிராட்மேன், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நினைவுகூர்ந்தேன். இன்று இந்தியாவில் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் ஸ்டீபன் ஸ்மித்தும் இளம் கிரிக்கெட் வீரர்களைச் செதுக்குகிறார்கள். உங்களது இந்திய வருகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித்தின் பேட்டிங் ஆட்டத்தைப் போல ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.