பிரதமர் நரேந்திர மோடியின் நட்சத்திர தொடக்கம் 2025: வெறும் 15 நாட்களில் கனவை நிஜமாக மாற்றும் முயற்சி

பிரதமர் நரேந்திர மோடியின் நட்சத்திர தொடக்கம் 2025: வெறும் 15 நாட்களில் கனவை நிஜமாக மாற்றும் முயற்சி

January 16th, 02:18 pm

பிரதமர் நரேந்திர மோடி 2025 ஆம் ஆண்டை, ஒரு முற்போக்கான, தன்னிறைவு மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவுக்கான தனது பார்வையை வெளிப்படுத்தும் வகையில், உருமாறும் முயற்சிகளுடன் தொடங்கியுள்ளார். உள்கட்டமைப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவது முதல் இளைஞர்களை மேம்படுத்துவது மற்றும் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது வரை, அவரது தலைமையானது குறிப்பிடத்தக்க ஆண்டிற்கான தொனியை அமைத்துள்ளது.

பல்வேறு ரயில்வே திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

பல்வேறு ரயில்வே திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

January 06th, 01:00 pm

தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா அவர்களே, ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு அவர்களே, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு ஒமர் அப்துல்லா அவர்களே, தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களே, ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு வி சோமையா அவர்களே, திரு ரவ்னீத் சிங் பிட்டு அவர்களே, திரு பண்டி சஞ்சய் குமார் அவர்களே, ஏனைய அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

January 06th, 12:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதியதாக ஜம்மு ரயில்வே கோட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய ரயில் முனையத்தையும் தொடங்கி வைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

January 05th, 12:15 pm

ரூ 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களின் முக்கிய கவனம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதும் பயணத்தை எளிதாக்குவதும் ஆகும். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலிலும் பிரதமர் பயணம் மேற்கொண்டார்.

தில்லியில் நாளை ரூ. 12,200 கோடிக்கு அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

January 04th, 05:00 pm

தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார் பிரதமர்