அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 29th, 01:28 pm
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சரவை நண்பர்கள் திரு ஜகத் பிரகாஷ் நத்தா, திரு மன்சுக் மாண்டவியா, திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதுரி அவர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மருத்துவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் மற்றும் சுகாதார வல்லுநர்களே, சுகாதார அமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளே!சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
October 29th, 01:00 pm
தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 10:15 am
இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
October 02nd, 10:10 am
தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
September 06th, 01:00 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
September 06th, 12:30 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 02nd, 03:00 pm
உலகப் புகழ்பெற்ற சூரியக் கோயில், உங்கேஸ்வரி மாதா மற்றும் தேவ் குண்ட் ஆகியவற்றின் புனித பூமியை நான் வணங்குகிறேன்! அனைவருக்கும் என் வாழ்த்துகள்! சூரிய பகவானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
March 02nd, 02:30 pm
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் சாலை, ரயில்வே, தூய்மை கங்கை உள்ளிட்ட திட்டப் பணிகள் அடங்கும்.நினைவுப் பரிசுகளை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க மக்களை பிரதமர் ஊக்குவிக்கிறார்
October 27th, 01:54 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமக்குக் கிடைத்த நினைவுப் பரிசுகளை ஏலம் விடும் நடைமுறையின் போது, மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தூய்மை கங்கை இயக்கத்திற்கு வழங்கப்படுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமருக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நினைவுப்பரிசுகளைக் காட்சிப்படுத்த தேசிய நவீன கலைக்கூடத்தில் கண்காட்சி
October 02nd, 04:32 pm
தமக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி குறித்துப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிவிட்டுள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற லோகமான்ய திலகர் விருது வழங்கும் விழா 2023-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 12:00 pm
இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே உற்சாகமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறேன். இன்று, நமது முன்மாதிரியும், இந்தியாவின் பெருமையுமான பாலகங்காதர திலகரின் நினைவு தினம் ஆகும். மேலும், இன்று அன்னா பாவ் சாத்தே அவர்களின் பிறந்த நாளாகும். லோகமான்ய திலகர் அவர்கள் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் நெற்றித் திலகம் போன்றவர். அதேசமயம், சமூக சீர்திருத்தங்களுக்கு அன்னா பாவ் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது, அசாதாரணமானது. இந்த இருபெரும் ஆளுமைகளின் பாதங்களில் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
August 01st, 11:45 am
விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர், லோக்மான்ய திலகர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், லோக்மான்ய திலகரின் நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் இது அவருக்கு ஒரு சிறப்பு நாள் என்று கூறினார். லோக்மான்ய திலகரின் புண்ணிய திதி மற்றும் அன்னா பாவ் சாத்தேவின் பிறந்த தினம் இன்று என்று பிரதமர் குறிப்பிட்டார். லோக்மான்ய திலகர் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 'திலகம்' என்று பிரதமர் கூறினார். சமூகத்தின் மேம்பாட்டிற்காக அன்னா பாவ் சாத்தேவின் அசாதாரணமான மற்றும் இணையற்ற பங்களிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். சத்ரபதி சிவாஜி, சபேகர் சகோதரர், ஜோதிபா புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோர் அவதரித்த பூமிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். முன்னதாக தக்துஷேத் கோவிலில் பிரதமர் ஆசி பெற்றார்.ஜி 20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை
July 28th, 09:01 am
வரலாறும் பண்பாடும் நிறைந்த சென்னைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்! யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தைக் காண உங்களுக்கு சிறிது நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதன் மனம்கவரும் கற்சிற்பங்கள் மற்றும் சிறந்த அழகு கொண்ட இது, கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.சென்னையில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை
July 28th, 09:00 am
சென்னை வந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், சென்னை நகரம் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு நிறைந்தது என்று குறிப்பிட்டார். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் சின்னமான மாமல்லபுரம் 'கட்டாயம் பார்க்க வேண்டிய' இடம் என்பதைக் கண்டுகளித்து மனம்கவரும் கற்சிற்பங்களையும் அதன் மகத்தான அழகையும் அனுபவிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
March 24th, 05:42 pm
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, மாநில அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, பிற உயரதிகாரிகளே மற்றும் காசியின் என் அன்பு சகோதர சகோதரிகளே!உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.1780 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
March 24th, 01:15 pm
வாரணாசியில் ரூ.1780 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து கடோவ்லியாவுக்கு பயணிகள் கம்பிவடப் பாதை, கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் பகவான்பூரில் 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிக்ரா விளையாட்டு மைதானத்தின், 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மறுமேம்பாட்டுப் பணி, இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகத்தால் சேவாபுரியின் இசர்வார் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள எல்பிஜி நிரப்பும் நிலையம், பர்தாரா கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம், மிதக்கும் ஜெட்டி ஆகிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 63 கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பயனளிக்கும், 19 குடிநீர் வழங்கும் திட்டங்கள், ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 59 குடிநீர் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கர்கியாவோனில், பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தும் ஒருங்கிணைந்த நிலையத்தை அவர் திறந்து வைத்தார். வாரணாசி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பிரம்ம குமாரிகளின் நீர்-மக்கள் திட்டத்தைக் காணொலி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 16th, 01:00 pm
பிரம்ம குமாரிகள் அமைப்பின் பிரமுக் ராஜ்யோகினி தாதி ரட்டன் மோகினி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, பிரம்மா குருமாரிகள் அமைப்பின் உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே அன்பர்களே!“நீர் - மக்கள் திட்டத்தை” காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திறந்துவைத்து உரையாற்றினார்
February 16th, 12:55 pm
பிரம்மகுமாரிகளின் நீர்-மக்கள் இயக்கத் தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் - எம்வி கங்கா விலாஸின் போக்குவரத்து மற்றும் கூடார நகரத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 13th, 10:35 am
பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், எனது அமைச்சரவை சகாக்கள், சுற்றுலாத் துறை நண்பர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாரணாசிக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள், இதர பிரமுகர்கள், பெண்கள் மற்றும் அன்பர்களே!வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் - எம்வி கங்கா விலாஸ் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
January 13th, 10:18 am
வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக் கப்பல்-எம்வி கங்கா விலாஸை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், டென்ட் சிட்டியையும் திறந்து வைத்தார். மேலும் ரூ.1000 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் இந்த நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை ஏற்படுத்தும்.