பீகாரில் நாளந்தாவின் இடிபாடுகளை பிரதமர் பார்வையிட்டார்
June 19th, 01:39 pm
பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று எச்சங்களாக திகழும் பண்டைக்கால இடிபாடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அசல் நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் முதல் குடியிருப்பு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாளந்தாவின் இடிபாடுகள் 2016-ம் ஆண்டில் ஐ.நா பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
June 19th, 10:31 am
மூன்றாவது முறையாக பதவியேற்ற முதல் 10 நாட்களுக்குள், நாளந்தாவுக்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது உண்மையில் எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கான ஒரு நல்ல அறிகுறியாக இதைப் பார்க்கிறேன். நாளந்தா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. நாளந்தா என்பது ஒரு அடையாளம், ஒரு மரியாதை. நாளந்தா என்பது ஒரு மதிப்பு, ஒரு மந்திரம், ஒரு பெருமிதம், ஒரு கதை. புத்தகங்கள் நெருப்பில் எரிந்தாலும் அறிவை அணைக்க முடியாது என்ற உண்மையை நாளந்தா வெளிப்படுத்துகிறது. நாளந்தாவின் அழிவு பாரதத்தை இருளால் நிரப்பியது. இப்போது, அதன் மறுசீரமைப்பு பாரதத்தின் பொற்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
June 19th, 10:30 am
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.06.2024) தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் இந்நிகழ்ச்சியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.