ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

December 05th, 11:10 am

ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

December 01st, 12:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாகாலாந்து மக்களுக்கு அவர்களின் மாநில தினத்தையொட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாகா கலாச்சாரம் அதன் கடமை மற்றும் இரக்க உணர்வுக்கு பெயர் பெற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.