
PM lauds 10 years of the Digital India initiative
July 01st, 09:40 am
The Prime Minister, Shri Narendra Modi has lauded the successful completion of 10 years of the Digital India initiative. He remarked that a decade later, we stand witness to a journey that has touched countless lives and ushered in a new era of empowerment. India has made many strides in digital payments, powered by the collective resolve of 140 crore Indians Shri Modi stated.
பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
June 19th, 05:48 pm
பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.
வனஉயிரினப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
March 03rd, 07:14 pm
வன உயிரின பாதுகாப்பில் நாட்டின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில், புலிகள், சிறுத்தைகள் மற்றும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது அதன் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான நாட்டின் ஆழமான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த தேர்வு வீரர்களின் அனுபவங்களைக் கேளுங்கள்: பிரதமர்
February 17th, 07:41 pm
தேர்வு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வான தேர்வு குறித்த விவாதம் 2025-ன் சிறப்பு அத்தியாயம் 2025 பிப்ரவரி 18-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இதில் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த இளம் தேர்வு வீரர்கள் இடம் பெறுகின்றனர். தேர்வு தொடர்பான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் கடந்து வந்த அவர்களின் அனுபவங்கள், உத்திகள், நுண்ணறிவுகள் ஆகியவற்றை இந்த அத்தியாயம் வெளிப்படுத்தும்.தேர்வு நேரத்தில் தேர்வு வீரர்களுக்கு மிகப்பெரிய துணைகளில் ஒன்று நேர்மறை சிந்தனை: பிரதமர்
February 15th, 05:58 pm
தேர்வுக்கான தயாரிப்புகளின் போது மாணவர்களுக்கு ஒரு முக்கிய ஆதரவாக விளங்கும் நேர்மறை சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.தொழில்நுட்பம், நல்லாட்சி ஆகியவற்றின் சக்தியைப் பயன்படுத்தி கிராமப்புற அதிகாரமளித்தலை கிராம்ப்புற நில டிஜிட்டல் மயமாக்கல் மேம்படுத்துகிறது: பிரதமர்
January 18th, 10:54 am
கிராமப்புற நிலங்களை டிஜிட்டல் மயமாக்குதல், தொழில்நுட்பத்தின் சக்தியையும் நல்லாட்சியின் சக்தியையும் பயன்படுத்தி கிராமப்புறங்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்வமித்வா திட்டம் குறித்த தகவலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
January 18th, 10:07 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஸ்வமித்வா திட்டம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.நாட்டின் திறமையான இளைஞர்கள் பல்வேறு துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்: பிரதமர்
January 04th, 04:14 pm
பல்வேறு துறைகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த வெற்றிக்கு நாட்டின் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும்தான் காரணம் என்று கூறினார்.புதுதில்லியில் டிசம்பர் 26 அன்று நடைபெறும் வீரபாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
December 25th, 01:58 pm
இந்தியாவின் எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும் குழந்தைகளை கௌரவிக்கும் நாடு தழுவிய கொண்டாட்டமான வீரபாலகர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 26 அன்று நண்பகல் 12 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.நமது இளைஞர் சக்தி அதிசயங்களை நிகழ்த்தும்: பிரதமர்
November 28th, 07:41 pm
இந்தியாவின் இளைஞர் சக்தியால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்கள் பிரகாசிக்கவும், சிறந்து விளங்கவும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.Prime Minister hails Make In India success story for global economic boost
July 16th, 10:28 pm
The Prime Minister, Shri Narendra Modi has hailed Make In India success story for global economic boost. Shri Modi has shared a glimpse of how Make In India is propelling India's economy onto the global stage.9 ஆண்டு டிஜிட்டல் இந்தியா செயல்பாட்டுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
July 01st, 01:49 pm
டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 9 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து அதிகாரம் பெற்ற இந்தியாவின் அடையாளமாக டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.வங்கித் துறையை சிறப்பாக மாற்றியமைப்பதில் பொதுத்துறை வங்கிகள் ஆற்றும் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு
June 19th, 08:03 pm
வங்கித்துறையைச் சிறப்பாக மாற்றியமைப்பதில் பொதுத்துறை வங்கிகள் ஆற்றும் பங்களிப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மைகவ் இந்தியாவின் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.தேசியப் படைப்பாளிகள் விருதில் பங்கேற்குமாறு மக்களைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
February 11th, 08:28 pm
மை கவ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேசிய படைப்பாளிகள் விருது அறிவிப்பில் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார்.வீரப் புதல்வர்கள் தினத்தையொட்டி டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
December 25th, 04:17 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 26 டிசம்பர் 2023 அன்று காலை 10:30 மணிக்கு 'வீரப் புதல்வர்கள் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின்போது, தில்லியில் இளைஞர்களின் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.அரசின் திட்டங்கள் தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியைத் தருகின்றன: பிரதமர்
November 10th, 03:03 pm
அரசின் பல்வேறு திட்டங்கள் தீபாவளியன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார்.24.09.2023 அன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 105-வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 24th, 11:30 am
எனதருமைக் குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில் உங்கள் அனைவருடனும், தேசத்தின் வெற்றியை, நாட்டுமக்களின் வெற்றியை, அவர்களின் உத்வேகமளிக்கும் வாழ்க்கைப் பயணத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை எனக்கு வாய்த்திருக்கிறது. எனக்குக் கிடைக்கும் கடிதங்களில் இப்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் மிக அதிகம் காணப்படுகின்றன. முதலாவதாக, சந்திரயான் – 3இன் வெற்றிகரமான தரையிறங்கல்; இரண்டாவதாக, தில்லியில் நடைபெற்ற ஜி20இன் வெற்றிகரமான ஏற்பாடுகள். தேசத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும், அனைத்துப் பிரிவிடமிருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், எனக்குக் கணக்கில்லாத கடிதங்கள் கிடைத்திருக்கின்றன. சந்திரயான் – 3இன் லேண்டரானது, சந்திரனின் மீது இறங்கும் தருவாயில் இருந்த போது, கோடிக்கணக்கான மக்கள், பல்வேறு வழிகளில், ஒரே நேரத்தில் இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு நொடியின் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருந்தார்கள். இஸ்ரோ அமைப்பின் யூ ட்யூப் நேரடி ஒளிபரப்பில், 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வினைக் கண்டார்கள் என்பதே கூட மிகப்பெரிய சாதனை. சந்திரயான் – 3உடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் ஈடுபாடு எத்தனை ஆழமாக இருந்திருக்கிறது என்பது இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திரயானின் இந்த வெற்றி குறித்து தேசத்தில் இன்றைய காலகட்டத்தில் மிக அருமையான வினா விடைப் போட்டியும் நடைபெற்று வருகிறது; இந்தப் போட்டிக்கு இடப்பட்டிருக்கும் பெயர் – சந்திரயான் – 3 மஹா க்விஸ் ஆகும். மைகவ் தளத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து விட்டார்கள். மைகவ்வின் தொடக்கத்திற்குப் பிறகு, இது எந்த ஒரு வினா விடைப் போட்டி என்று எடுத்துக் கொண்டாலும், மிகப்பெரிய பங்கெடுப்பு என்று கொள்ளலாம். நீங்கள் இதுவரை இதில் பங்கெடுக்கவில்லை என்றால், காலம் இன்னும் கடந்து விடவில்லை, இப்போது கூட இதிலே இன்னும் 6 நாட்கள் எஞ்சி இருக்கின்றன. இந்த வினாவிடைப் போட்டியில் நீங்களும் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடத்திலே நான் கேட்டுக் கொள்கிறேன்.மனதின் குரல், 100ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 30.04.2023
April 30th, 11:31 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலுடைய 100ஆவது பகுதி. உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, இலட்சோபலட்சம் செய்திகள் வந்திருக்கின்றன, முடிந்த மட்டிலும் அதிகபட்ச கடிதங்களைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்திகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். உங்களுடைய கடிதங்களைப் படிக்கும் வேளைகளில் பல சமயம் நான் உணர்ச்சிவயப்பட்டேன், உணர்வுகளில் அமிழ்ந்து போனேன், உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டேன், அடித்துச் செல்லப்பட்டேன், ஆனால் ஒருவழியாக, என்னையே நான் நிதானித்தும் கொண்டேன். நீங்கள் மனதின் குரலுடைய 100ஆவது பகுதிக்காக பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள் ஆனால், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறேனே – பாராட்டுக்களுக்கு மொத்தச் சொந்தக்காரர்கள், மனதின் குரலின் நேயர்களான நீங்களும், நம்முடைய நாட்டு மக்களும் மட்டுமே. மனதின் குரல்….. கோடானுகோடி பாரதநாட்டவர்களுடைய மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு.நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மரியாதை செலுத்துவதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
January 23rd, 08:03 pm
நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டது
November 08th, 07:15 pm
ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.