Prime Minister remembers the legendary Singer Mohammed Rafi on his 100th birth anniversary

December 24th, 07:12 pm

The Prime Minister, Shri Narendra Modi, remembers the legendary Singer Mohammed Rafi Sahab on his 100th birth anniversary. Prime Minister Modi remarked that Mohammed Rafi Sahab was a musical genius whose cultural influence and impact transcends generations.

டாக்டர் பிருத்விந்திர முகர்ஜி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 30th, 09:27 pm

டாக்டர் பிருத்விந்திர முகர்ஜி மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டாக்டர் முகர்ஜி, பன்முக ஆளுமை கொண்டவர் என்றும், இசை மற்றும் கவிதைகளில் பேரார்வம் கொண்டவர் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை

November 22nd, 03:02 am

இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.

கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்

November 22nd, 03:00 am

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi

November 21st, 08:00 pm

Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.

கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை

November 21st, 07:50 pm

கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.

கயானாவுக்கு பிரதமரின் அரசுமுறைப் பயணம்: கிடைத்த பலன்கள் (நவம்பர் 19-21, 2024)

November 20th, 09:55 pm

ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பிரபல நாட்டுப்புறப் பாடகர் ஷாரதா சின்ஹா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 06th, 07:46 am

பிரபல நாட்டுப்புறப் பாடகர் ஷாரதா சின்ஹா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஷாரதா சின்ஹாவின் மைதிலி, போஜ்புரி நாட்டுப்புறப் பாடல்கள், கடந்த பல தசாப்தங்களாக மிகவும் புகழ்பெற்றவை என்று கூறியுள்ள திரு மோடி நம்பிக்கையூட்டும் பெரும் பண்டிகையான, சாத்-துடன் தொடர்புடைய அவரது இனிய பாடல்கள் எப்போதும் நினைவில் நிற்கும் என்று கூறியுள்ளார்.

'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற தாம் எழுதிய கர்பா பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

October 07th, 10:44 am

துர்கா தேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாம் எழுதிய 'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற கர்பா பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி

September 29th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.

‘சிறந்த உலக இசை’க்கான கிராமி விருதினை வென்றுள்ள உஸ்தாத் ஜாகீர் உசேனுக்கும் மற்றவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

February 05th, 02:51 pm

உலக அளவில் சிறந்த இசைக்கான கிராமி விருதினை இன்று வென்றுள்ள இசைக் கலைஞர்கள் உஸ்தாத் ஜாகீர் உசேன், ராகேஷ் சௌராசியா, சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஓமன் கூட்டு இசை நிகழ்ச்சிக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

January 30th, 10:17 pm

குடியரசு தினத்தன்று ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தியா-ஓமன் கூட்டு இசை நிகழ்ச்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

What PM Modi has to say about the role of teachers in shaping students’ lives

January 29th, 05:38 pm

Prime Minister Narendra Modi addressed and interacted with students during the Pariskha pe Charcha, 2024. He spoke about the power of music, especially in students' lives, and how a school's music teacher has the unique ability to ease the stress of every student.

எகிப்து சிறுமி, தேசபக்தி பாடலை பாடியதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

January 29th, 05:02 pm

எகிப்திலிருந்து வந்திருந்த கரீமன், 75-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நாட்டுப்பற்றுப் பாடலான தேஷ் ரங்கீலா பாடலைப் பாடியதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

January 23rd, 06:01 pm

பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.

ராமாயணத்தின் உணர்ச்சிகரமான சபரி அத்தியாயத்தில் மைதிலி தாக்கூர் பாடிய பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 20th, 09:22 am

அயோத்தியில் பிரதிஷ்டை கொண்டாட்டம் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தொடர்பான பல்வேறு சூழல்களை அனைவருக்கும் நினைவூட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

கயானா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ ராம பஜனையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 19th, 01:36 pm

கயானா நாட்டில் நடைபெற்ற ஸ்ரீ ராம பஜனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19-01-2024) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சுரேஷ் வடேகரின் பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 19th, 09:44 am

சுரேஷ் வடேகர், ஆர்யா அம்பேகர் ஆகியோரின் பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் ராம பக்தி உணர்வில் மூழ்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற பாரம்பரிய கர்நாடக இசைப் பாடலை பிரதமர் பதிவிட்டுள்ளார்

January 15th, 09:29 am

டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற பாரம்பரிய கர்நாடக இசைப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மகாகவி அருணாசலக் கவிராயர் எழுதிய ராம நாடகத்தின் பாடலைப் பிரதமர் பதிவிட்டுள்ளார்

January 14th, 11:03 am

பாடகர் அஸ்வத் நாராயணன் பாடிய மகாகவி அருணாசலக் கவிராயரின் ராம நாடகப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.