Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 11:00 am
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.Prime Minister’s meeting with President of the UAE
February 13th, 05:33 pm
Prime Minister Narendra Modi arrived in Abu Dhabi on an official visit to the UAE. In a special and warm gesture, he was received at the airport by the President of the UAE His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan, and thereafter, accorded a ceremonial welcome. The two leaders held one-on-one and delegation level talks. They reviewed the bilateral partnership and discussed new areas of cooperation.சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 18th, 11:00 am
எனது அமைச்சரவை தோழர்கள் ஜி. கிஷன் ரெட்டி, மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மெக்வால் அவர்களே, உலக நாடுகளின் பிரதிநிதிகளே அனைவருக்கும் வணக்கம். அருங்காட்சியகத் தினத்தையொட்டி அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி 2023-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார்
May 18th, 10:58 am
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பிரகதி மைதானத்தில் இன்று சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை தொடங்கிவைத்தார். மத்திய செயலகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைய உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் மெய்நிகர் பயணத்தையும் அவர் தொடங்கிவைத்தார். தொழில்நுட்ப மேளா, பாதுகாப்பு ஆய்வகம் ஆகியவற்றையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் துவக்கிவைத்தார். அருங்காட்சியகங்கள், நிலைத்தன்மை நலம் என்ற இந்தாண்டின் கருப்பொருளுடனான 47-வது சர்வதேச அருங்காட்சியகத் தினத்தைக் கொண்டாட, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.2022 மிகவும் ஊக்கமளிக்கிறது, அற்புதமானது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 25th, 11:00 am
நண்பர்களே, இவை அனைத்துடன் கூடவே 2022ஆம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். அது என்னவென்றால், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது. நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குஜராத்தின் மாதவ்புரின் திருவிழாவிலே ருக்மணி திருக்கல்யாணம், பகவான் கிருஷ்ணரின் வடகிழக்குடனான தொடர்புகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன; அல்லது காசி-தமிழ் சங்கமம் ஆகட்டும், இந்தக் காலங்களில் ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ஆம் ஆண்டிலே நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்!! அந்த ஒப்பற்ற கணங்களிலே நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சிலிர்ப்பை உணர்ந்தார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவண்ணத்தால் நிரப்பியது. 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும் – அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும்.Welfare of tribal communities is our foremost priority: PM Modi in Vyara, Gujarat
October 20th, 03:33 pm
PM Modi laid the foundation stone of multiple development initiatives in Vyara, Tapi. He said that the country has seen two types of politics regarding tribal interests and the welfare of tribal communities. On the one hand, there are parties which do not care for tribal interests and have a history of making false promises to the tribals while on the other hand there is a party like BJP, which always gave top priority to tribal welfare.குஜராத்தின் தபி, வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
October 20th, 03:32 pm
குஜராத்தின் தபி, வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இணைப்பு இல்லாத பகுதிகளின் கட்டமைப்புடன் சபுத்தாராவிலிருந்து ஒற்றுமை சிலை வரையிலான சாலையை மேம்படுத்துதல், தபி, நர்மதா மாவட்டங்களில், ரூ.300 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியவை இந்தத் திட்டங்கள்.ஏப்ரல் 24-ல் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி அடிப்படையில் நமோ செயலியில் நடைபெறும் இரண்டு வினாடி-வினாக்களில் மக்கள் பங்கேற்குமாறு பிரதமர் வலியுறுத்தல்
April 25th, 06:52 pm
ஏப்ரல் 24-ல் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி அடிப்படையில் நமோ செயலியில் நடைபெறும் இரண்டு வினாடி-வினாக்களில் மக்கள் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மக்கள் எந்த இடத்தில் வினாடி வினாவில் பங்கேற்பது என்பதற்கான இணைப்பையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.பிரதமர்களின் அருங்காட்சியகத்தை ஏப்ரல் 14 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார்
April 12th, 07:33 pm
பிரதமர்களின் அருங்காட்சியகத்தை (சங்ரஹாலயா) ஏப்ரல் 14 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைப்பார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் போது தொடங்கி வைக்கப்படும் இந்த அருங்காட்சியகம், இந்திய பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் மூலம் சுதந்திரதத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றை எடுத்துரைக்கும்.சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் நவீன ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரை
August 28th, 08:48 pm
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பஞ்சாப் ஆளுநர் திரு.வி.பி.சிங் பட்னோர் அவர்களே, முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அவர்களே, எனது அமைச்சரவைத் தோழர்கள் திரு.கிஷண் ரெட்டி அவர்களே, திரு.அர்ஜூன்ராம் மெக்வால் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களே, சகோதர,சகோதரிகளே வணக்கம்!புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலா பாக் நினைவிட வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
August 28th, 08:46 pm
ஜாலியன் வாலா பாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியின்போது, நினைவிடத்தில் அருங்காட்சியக கூடங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த வளாகத்தை மேம்படுத்த மத்திய அரசு எடுத்த பல வளர்ச்சி நடவடிக்கைகளை இந்த நிகழ்வு, காட்டுகிறது.புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவக காட்சிகள்.
August 27th, 07:38 am
ஆகஸ்ட் 28, சனிக்கிழமை, புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவக வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அவர் நினைவகத்தில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகக் காட்சியகங்களைத் திறந்து வைப்பார். இந்த வளாகத்தை மேம்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள பல மேம்பாட்டு முயற்சிகளையும் இந்த நிகழ்ச்சி காட்சிப்படுத்தும்.ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
August 26th, 06:51 pm
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை 2021 ஆகஸ்ட் 28 அன்று மாலை 6.25 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக காட்சிக் கூடங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார். வளாகத்தை மேம்படுத்த அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சியின் போது விளக்கப்படும்.குஜராத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 16th, 04:05 pm
எனது அமைச்சரவை தோழரும், காந்திநகர் எம்பியுமான திரு அமித் ஷா அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் நிதின் பாய் அவர்களே, ரயில்வே இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் மாநில பிஜேபி தலைவர் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, எனது அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 16th, 04:04 pm
குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்திரவியல் காட்சியகங்கள் மற்றும் இயற்கை பூங்காவையும் அவர் திறந்து வைத்தார். காந்திநகர் கேப்பிடல்-வாரணாசி அதிவேக வாரந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் காந்திநகர் கேப்பிடல்-வரேத்தா இடையேயான மின்சார ரயில் சேவைகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.மனதின் குரல், 75ஆவது பகுதி
March 28th, 11:30 am
மனதின் குரல், 75ஆவது பகுதிஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் வருகை
January 01st, 07:28 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்திற்கு 2020ஆம் ஆண்டு ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் வருகை தரவுள்ளார்.PM's Press Statement during the state visit of Chancellor of Germany to India
November 01st, 04:40 pm
Prime Minster Narendra Modi said that the bilateral relations between India-Germany are based on the fundamental belief in Democracy and Rule of Law.