
உத்தரப் பிரதேசம், கான்பூர் நகரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தபோது பிரதமர் ஆற்றிய உரை
May 30th, 03:29 pm
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்களே, துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மௌரியா, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் இங்கு அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கும் கான்பூரைச் சேர்ந்த எனது அன்பான சகோதர சகோதரிகளே.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
May 30th, 03:08 pm
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இன்று ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், கான்பூருக்கான பயணம் முதலில் 2025 ஏப்ரல் 24 என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது என்றார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலியான கான்பூரின் புதல்வர் திரு சுபம் துவிவேதிக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள சகோதரிகளின் புதல்விகளின் வலி, துயரம், கோபம், வேதனை ஆகியவற்றை தாம் உணர்வதாகப் பிரதமர் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தப்பட்டபோது இந்த கூட்டான கோபத்தை உலகம் கண்ணுற்றதாக அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்பதற்கான நிர்ப்பந்தம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஏற்பட்டது. நமது ராணுவத்தினரின் துணிவுக்கு வணக்கம் செலுத்திய பிரதமர், சுதந்திரப் போராட்ட பூமியிலிருந்து அவர்களின் வீரத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார். ஆபரேஷன் சிந்தூரின்போது கருணைக்காக யாசித்த எதிரிகள், ஆபரேஷன் சிந்தூர் முடிவடையாத நிலையில், எந்த மாயையிலும் இருக்க வேண்டாம் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவின் மூன்று தெளிவான கோட்பாடுகள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். முதலாவதாக ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தீர்மானமான பதிலடியை இந்தியா வழங்கும். இதற்கான நேரம், நடைமுறை, நிபந்தனைகள் ஆகியவை இந்திய ராணுவத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படும். இரண்டாவதாக அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இனிமேலும் இந்தியாவை மிரட்ட முடியாது. இத்தகைய எச்சரிக்கைகள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது. மூன்றாவதாக பயங்கரவாதத்தின் மூளையாக செயல்படுவோரையும் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அரசுகளையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் இந்தியா பார்க்கும். பாகிஸ்தானின் அரசு மற்றும் அரசு சாராத செயல்பாட்டாளர்கள் என்ற பாகுபாடு இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்படாது. எதிரிகள் எங்கிருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.
தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு, ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 07th, 02:07 pm
நாட்டில் தொழிற்கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஒரு முக்கிய படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.ஏபிபி நெட்வொர்க் இந்தியா @2047 உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
May 06th, 08:04 pm
இன்று காலை முதல், பாரத் மண்டபம் ஒரு துடிப்பான தளமாக மாறியுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்பு, உங்கள் குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த உச்சிமாநாடு பன்முகத்தன்மையால் நிறைந்துள்ளது. பல பிரமுகர்கள் இந்த உச்சிமாநாட்டை கவனம் மிக்கதாக ஆக்கியுள்ளனர். உங்கள் அனுபவமும் மிகவும் செறிவாகியிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு, ஒரு வகையில், அதன் தனித்துவமான அம்சமாக மாறியுள்ளது. குறிப்பாக, எங்கள் ட்ரோன் சகோதரிகள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் அனைவரையும் நான் இப்போது சந்தித்தபோது, அவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்ட உற்சாகத்தைக் காண முடிந்தது. அவர்களின் ஒவ்வொரு உரையாடலையும் அவர்கள் நினைவில் வைத்திருந்தனர். இது உண்மையிலேயே ஒரு ஊக்கமளிக்கும் சந்தர்ப்பமாக இருந்து வருகிறது.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 உச்சி மாநாட்டில் உரையாற்றினார்
May 06th, 08:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஏபீபி நெட்வொர்க்கின் இந்தியா@2047 என்ற உச்சி மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உச்சிமாநாட்டின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். உச்சிமாநாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பை அவர் எடுத்துரைத்தார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 02nd, 02:06 pm
கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, முதலமைச்சர் திரு. பி. விஜயன் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது நண்பர்களே, மேடையில் குழுமியிருக்கும் பிரமுகர்களே, கேரளாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே.கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
May 02nd, 01:16 pm
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பகவான் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்று ஆண்டுகளுக்கு முன், செப்டம்பரில், ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த இடத்திற்குச் செல்லும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எடுத்துரைத்தார். தனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிரமாண்டமான சிலை நிறுவப்பட்டது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தச் சிலை ஆதி சங்கராச்சாரியாரின் மகத்தான ஆன்மீக ஞானம் மற்றும் போதனைகளுக்கு புகழ் சேர்ப்பதாக அவர் கூறினார். உத்தராகண்டில் உள்ள புனித கேதார்நாத் ஆலயத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் தெய்வீக சிலையைத் திறந்து வைக்கும் பெருமையும் தனக்குக் கிடைத்ததை அவர் நினைவுகூர்ந்தார். கேதார்நாத் கோயிலின் கதவுகள் இன்று பக்தர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு நிகழ்வாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கராச்சாரியார், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நாட்டின் மனசாட்சியை விழிப்படையச் செய்தார் என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். ஒன்றுபட்ட, ஆன்மீக ரீதியில் ஒளி பெற்ற பாரதத்திற்கு அவரது முயற்சிகள் அடித்தளம் அமைத்தன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.Today, India's youth are demonstrating our immense potential to the world, through their dedication and innovation: PM Modi in Rozgar Mela
April 26th, 11:23 am
PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to youth. He highlighted that the government is ensuring employment and self-employment opportunities for the country's youth. The PM spoke about the immense opportunity WAVES 2025 summit offers for the youth. He recalled the mantra of ‘Nagrik Devo Bhava,’ and encouraged youth to serve every citizen of India.வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
April 26th, 11:00 am
இந்த பட்ஜெட்டில், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிக்கவும், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கவும் உற்பத்தி இயக்கத்தை அரசு அறிவித்துள்ளது: பிரதமர்17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 21st, 11:30 am
எனது அமைச்சரவை நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு. சக்திகாந்த தாஸ் அவர்களே, டாக்டர் சோமநாதன் அவர்களே, இதர மூத்த அதிகாரிகளே, நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணிகளைச் சேர்ந்த நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!17-வது குடிமைப் பணி தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
April 21st, 11:00 am
17-வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், குடிமைப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பிரதமர் விருதுகளையும் வழங்கினார். குடிமைப் பணித் தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த தினம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி சர்தார் படேல் குடிமைப் பணி அதிகாரிகளை 'இந்தியாவின் எஃகுக் கட்டமைப்பு' என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, ஒழுக்கம், நேர்மை, ஜனநாயக மாண்புகள் ஆகிய பண்புகளுடன் தேசத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் அதிகாரத்துவம் என்ற படேலின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியைடந்த இந்தியாவாக உருவெடுப்பதற்கான உறுதிப்பாட்டின் பின்னணியில் சர்தார் படேலின் கொள்கைகள் அமைந்துள்ளதாக திரு மோடி புகழாரம் சூட்டினார்.தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
April 17th, 08:05 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
April 14th, 12:00 pm
ஹரியானாவின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர் லால் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷ்ண பால் அவர்களே, ஹரியானா அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே. வாழ்த்துக்கள்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
April 14th, 11:54 am
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நிறைவேற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஹரியானா மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், ஹரியானாவின் புனித பூமிக்கு மரியாதை செலுத்தினார், இது அன்னை சரஸ்வதியின் தோற்றம், மந்திரதேவியின் இருப்பிடம், பஞ்சமுகி ஹனுமான் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கபால்மோச்சன் சாஹிப் ஆகியோரின் இருப்பிடம் என்று அவர் கூறினார். ஹரியானா கலாச்சாரம், பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சங்கமம் என்று அவர் விவரித்தார். பாபாசாஹேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், பாபா சாகேப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை எடுத்துரைத்து, அவை இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
April 11th, 11:00 am
மேடையில் அமர்ந்துள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக்; மதிப்பிற்குரிய அமைச்சர்களே வணக்கம். தங்கள் ஆசீர்வாதங்களை வழங்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனது அன்பான குடும்ப உறுப்பினர்களான நமது காசி குடும்பத்தின் அன்புக்குரிய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை நான் தாழ்மையுடன் கோருகிறேன். இந்த அபரிமிதமான அன்புக்கு நான் உண்மையிலேயே கடன்பட்டிருக்கிறேன். காசி என்னுடையது, நான் காசியைச் சேர்ந்தவன்.உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்
April 11th, 10:49 am
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார். திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய அவர் காசியுடன் தமது ஆழமான தொடர்பை எடுத்துரைத்தார். தமக்கு ஆசி வழங்கியதற்காக அவர் தமது குடும்பத்தினருக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும்உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
April 09th, 09:43 pm
உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.முத்ரா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
April 08th, 01:30 pm
வணக்கம் ஐயா, செல்லப்பிராணிகளை வளர்ப்பதிலிருந்து அது தொடர்பான ஒரு தொழில்முனைவோராக நான் மாறினேன் என்பது பற்றிய எனது கதையை இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது வணிக முயற்சியின் பெயர் கே-9 வேர்ல்ட். அதில் நாங்கள் அனைத்து வகையான செல்லப்பிராணி பொருட்கள், மருந்துகளை விற்பனை செய்கிறோம் சார். முத்ரா கடன் பெற்ற பிறகு, செல்லப்பிராணிகள் தொடர்பான தொழிலை விரிவுபடுத்தினேன் சார், விலங்குகள் மீது எனக்கு இருக்கும் அன்பு வித்தியாசமானது. நான் சாப்பிடுகிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆனால் நான் அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் சார்.பிரதமர் தாய்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
April 03rd, 03:01 pm
எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காகப் பிரதமர் ஷினவத்ராவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமரின் மொரீஷியஸ் பயணம்: ஒப்பந்தங்களின் பட்டியல்
March 12th, 01:56 pm
எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களை (இந்திய ரூபாய் அல்லது மொரீஷியஸ் ரூபாய்) பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மொரீஷியஸ் வங்கி இடையே ஒப்பந்தம்.