ஜப்பான் முன்னாள் பிரதமரும், ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பு தலைவருமான மேன்மை தங்கிய திரு யோஷிஹிடே சுகாவை பிரதமர் சந்தித்தார்
July 06th, 07:03 pm
ஜப்பான் முன்னாள் பிரதமரும், ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பு தலைவருமான மேன்மை தங்கிய திரு யோஷிஹிடே சுகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கணேஷா நோ கை குழு மற்றும் கெய்டன்ரன் (ஜப்பான் வர்த்தக கூட்டமைப்பு) உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் திரு சுகா இந்தியா வருகை தந்துள்ளார்.