உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2024-ல் இந்தியாவையும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையையும் முன்னணி செமிகண்டக்டர் தலைமை நிர்வாக அதிகாரிகள் பாராட்டினர்

September 11th, 04:28 pm

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். செமிகான் இந்தியா 2024 செப்டம்பர் 11 முதல் 13 வரை 'குறைகடத்தி எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு இந்தியாவின் குறைகடத்தி உத்திகளையும் கொள்கையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய செமிகண்டக்டர் ஜாம்பவான்களின் உயர்நிலைத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இது உலகளாவிய தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் குறைகடத்தி துறையைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும். இந்த மாநாட்டில் 250-க்கும் அதிகமான கண்காட்சியாளர்களும், 150-க்கும் அதிகமான பேச்சாளர்களும் பங்கேற்கின்றனர்.

குறைக்கடத்தி நிர்வாகிகளின் வட்டமேஜை கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் முன்னணி குறைக்கடத்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்

September 10th, 11:44 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் குறைக்கடத்தி நிர்வாகிகளின் வட்டமேஜை மாநாடு நடைபெற்றது. குறைக்கடத்திகள் துறை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் விவாதித்தார். நமது பூமியின் வளர்ச்சிப் பாதையை இந்தத் துறை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து திரு மோடி பேசினார். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இந்தியாவை ஒரு சிறந்த முதலீட்டு இடமாக மாற்றுவதையும் அவர் எடுத்துரைத்தார்.

பிரதமருடன் என்எக்ஸ்பி செமிகண்டக்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திப்பு

March 30th, 10:16 am

பிரதமர் திரு.நரேந்திர மோடியை என்எக்ஸ்பி செமிகண்டக்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.குட் சிவெர்ஸ் சந்தித்தார்.