இந்தூரில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து, தூய்மை நகரங்கள் விருதை வழங்கினார் பிரதமர்

June 23rd, 06:00 pm

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை தொலைதூரத்திலிருந்தவாறே பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதாவது, பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்டம், நகர்ப்புற குடிநீர் வழங்கல் திட்டம், நகர்ப்புற திடக் கழிவு மேலாண்மை, நகர்ப்புற துப்புரவுத் திட்டம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நகர்ப்புற இயற்கைக்காட்சி திட்டம் போன்றவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் மோகன்புரா நீர்ப்பாசன திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் உரை

June 23rd, 02:04 pm

மோகன்புரா திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். இந்தத் திட்டம், ராஜ்கர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை கிடைக்கச் செய்யும். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும். பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார். மத்தியப்பிரதேச அரசு செய்த பணிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் நீர்ப்பாசனப் பகுதிகளின் அளவை அதிகரித்ததற்காக மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் மோகன்புரா நீர்ப்பாசனத் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

June 23rd, 02:00 pm

மோகன்புரா திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். இந்தத் திட்டம், ராஜ்கர் மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை கிடைக்கச் செய்யும். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரை வழங்கும். பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்.