போலந்து கபடி வீரர்களுடன் பிரதமர் சந்திப்பு
August 22nd, 09:48 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, வார்சாவில் இன்று (22.08.2024) போலந்து கபடி கூட்டமைப்பின் தலைவர் திரு.மைக்கேல் ஸ்பிக்ஸ்கோ, மற்றும் போலந்து கபடி கூட்டமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.அன்னா கால்பர்சிஸ்க் ஆகியோரை சந்தித்தார்.பில்லினியம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கவெல் லோபின்ஸ்கியை பிரதமர் சந்தித்தார்
August 22nd, 09:22 pm
புனேவில் பிரபலமாக உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பில்லினியம் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கவெல் லோபின்ஸ்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.டி.இசட்.எம்.ஒ இந்தியாவின் மேலாண் இயக்குநர் திருமிகு அலினா போஸ்லுஸ்னியுடன் பிரதமர் சந்திப்பு
August 22nd, 09:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, போலந்து நாட்டில் பல்வகை சுகாதாரப் பொருட்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டி.இசட்.எம்.ஒ இந்தியாவின் மேலாண் இயக்குநர் திருமதி அலினா போஸ்லுஸ்னியை சந்தித்துப் பேசினார்.பிரபல போலந்து இந்தியவியலாளர்களுடன் பிரதமர் சந்திப்பு
August 22nd, 09:18 pm
போலந்து நாட்டின் முக்கிய இந்தியவியலாளர்கள் குழுவினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து பேசினார். குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:இந்தியா-போலந்து உத்திசார் ஒத்துழைப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டம் (2024-2028)
August 22nd, 08:22 pm
2024 ஆகஸ்ட் 22 அன்று வார்சாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தியா - போலந்து பிரதமர்கள் எட்டிய ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும், உத்திசார் ஒத்துழைப்புக்கு இருதரப்பு திட்டத்தை அங்கீகரித்தும், பின்வரும் பகுதிகளில் 2024-2028 ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் ஐந்தாண்டு செயல் திட்டத்தை வகுத்து செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்:"உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுதல்" தொடர்பாக இந்தியா-போலந்து கூட்டறிக்கை
August 22nd, 08:21 pm
போலந்து பிரதமர் திரு. டொனால்ட் டஸ்க்கின் அழைப்பின் பேரில், இந்தியக் குடியரசின் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஆகஸ்ட் 21 முதல் 22 வரை போலந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவுகளின் 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் இந்த வரலாற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.போலந்து அதிபருடன் பிரதமர் சந்திப்பு
August 22nd, 08:14 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, வார்சாவில் உள்ள பெல்வேடர் மாளிகையில் இன்று(22.08.2024), போலந்து அதிபர் திரு.ஆன்டர்சேஜ் செபஸ்டியன் டூடா-வை சந்தித்துப் பேசினார்.வார்சாவில் உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
August 22nd, 08:12 pm
வார்சாவில் உள்ள அடையாளம் தெரியாத போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.போலந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
August 22nd, 06:10 pm
இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-போலந்து இடையேயான நல்லுறவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உறவை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர். உணவுப் பதப்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, சுரங்கம், தூய்மைத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.போலந்து பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 22nd, 03:00 pm
வார்சா நகரில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு, சிறப்பான விருந்தோம்பல், நட்பான வார்த்தைகளுக்காக பிரதமர் டஸ்க்கிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மான்டே காசினோ போரின் நினைவுச் சின்னத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
August 21st, 11:55 pm
வார்சாவில் உள்ள மான்டே காசினோ போர் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.போலந்து தலைநகர் வார்சாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 21st, 11:45 pm
இந்த காட்சி உண்மையிலேயே அற்புதமானது. உங்கள் உற்சாகம் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இங்கு காலடி எடுத்து வைத்த கணத்திலிருந்து நீங்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் போலந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் உணவு வகைகளைக் கொண்டவர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருவரும் இந்தியத்தன்மை என்ற உணர்வால் இணைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான வரவேற்பை அளித்துள்ளீர்கள். இந்த வரவேற்புக்காக உங்கள் அனைவருக்கும், போலந்து மக்களுக்கும் நான் நன்றி கூறிகிறேன்.PM Modi addresses Indian community in Warsaw, Poland
August 21st, 11:30 pm
Prime Minister Narendra Modi addressed the Indian Diaspora in Warsaw, Poland. The PM expressed that India's current global strategy emphasizes building strong international relationships and fostering peace. India’s approach has shifted to actively engaging with each nation. The focus is on enhancing global cooperation and leveraging India’s historical values of unity and compassion.போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள கோலாப்பூர் நினைவிடத்திற்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
August 21st, 10:31 pm
போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள கோலாப்பூர் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவகம், கோலாப்பூரின் மகத்தான அரச குடும்பத்துக்கு செலுத்தும் மரியாதை என்று திரு மோடி கூறினார். இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களால் இடம்பெயர்ந்த போலந்து நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் இந்த அரச குடும்பம் முன்னணியில் இருந்தது என்று திரு மோடி மேலும் கூறினார்.போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள நவாநகர் ஜாம் சாகிப் நினைவிடத்திற்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
August 21st, 10:27 pm
போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள நவாநகர் ஜாம் சாகிப் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். போலந்தின் வார்சாவில் உள்ள நவாநகர் ஜாம் சாகிப் நினைவிடம், இரண்டாம் உலகப் போரால் வீடிழந்த போலந்து குழந்தைகளுக்கு உறைவிடம் மற்றும் ஆதரவை உறுதி செய்த ஜாம் சாகிப் திக்விஜய்சிங்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜாவின் மனிதநேய பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது என்று திரு மோடி கூறினார். வார்சாவில் உள்ள நவாநகர் ஜாம் சாகிப் நினைவிடத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியையும் திரு மோடி பகிர்ந்து கொண்டார்.போலந்து தலைநகர் வார்சா சென்றடைந்தார் பிரதமர் மோடி
August 21st, 06:11 pm
பிரதமர் நரேந்திர மோடி போலந்து தலைநகர் வார்சா சென்றடைந்தார். 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதல்முறை. அவர் ஜனாதிபதி மேதகு திரு. அட்ரஸிஜ் செபாஸ்டியன் டுடே மற்றும் பிரதமர் மேதகு திரு. டொனால்ட் டஸ்க் ஆகியோரை சந்திப்பார். போலந்தில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் உரையாடுவார்.போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கான தமது பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
August 21st, 09:07 am
போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70-வது ஆண்டினைக் குறிப்பதாகும். மத்திய ஐரோப்பிய பகுதியின் பொருளாதாரத்தில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும். நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கு எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆந்ரீஸ் டூடா ஆகியோருடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். போலந்தில் உள்ள ஆர்வமிக்க இந்திய சமூகத்தினரையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.