2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு

May 04th, 07:44 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார்.

டென்மார்க்கின் ராணி 2ம் மார்க்கரீத் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார்

May 04th, 08:05 am

கோபன்ஹேகனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனையில் டென்மார்க்கின் ராணி 2ம் மார்க்கரீத் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளித்தார்.

கோபன்ஹேகனில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் பிரதமர்கள் உரையாடல்

May 03rd, 09:14 pm

பிரதமர் நரேந்திர மோடி, டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் கோபன்ஹேகனில் உள்ள பெல்லா மையத்தில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியா-டென்மார்க் வர்த்தக கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்

May 03rd, 07:40 pm

கோபன்ஹேகனில் இந்தியா-டென்மார்க் வர்த்தக கூட்டத்தில் தொழில் நிறுவனத் தலைவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தற்போது அச்சம் தவிர்த்தல் என்ற பொருள்படும் FOMO என்ற சொல் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. இந்தியாவின் சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை காண்பீர்களேயானால், எங்கள் நாட்டில் முதலீடு செய்யாதவர்கள் வாய்ப்பை நிச்சயம் தவறவிட்டவர்கள் ஆவீர்கள்” என்று தெரிவித்தார்.

டென்மார்க்கில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி அறிக்கை

May 03rd, 07:11 pm

எனக்கும் எனது பிரதிநிதி குழுவினருக்கும் டென்மார்க்கில் வழங்கப்பட்ட அருமையான வரவேற்பிற்கு மதிப்பிற்குரிய பிரதமருக்கும் உங்களது குழுவினருக்கும் மிக்க நன்றி. உங்களது அழகிய நாட்டிற்கு நான் வருவது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். இந்த இரு பயணங்களினால் நமது உறவிற்கு நெருக்கத்தையும் ஆற்றலையும் சேர்க்க நம்மால் இயன்றுள்ளது. நம் இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகள், கருத்து சுதந்திரம் சட்ட விதிமுறைகளை பகிர்வது மட்டுமல்லாமல், நிறைவு தரும் ஆற்றல்களையும் பெற்றுள்ளோம்.

டென்மார்க் பிரதமருடனான பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றிய செய்திக்குறிப்பு

May 03rd, 06:45 pm

டென்மார்க் பிரதமர் மேன்மைதங்கிய திருமதி மெட்டே ஃப்ரடெரிக்செனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

India–Denmark Joint Statement during the Visit of Prime Minister to Denmark

May 03rd, 05:16 pm

PM Modi and PM Frederiksen held extensive talks in Copenhagen. The two leaders noted with satisfaction the progress made in various areas since the visit of PM Frederiksen to India in October 2021 especially in the sectors of renewable energy, health, shipping, and water. They emphasized the importance of India- EU Strategic Partnership and reaffirmed their commitment to further strengthen this partnership.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றடைந்த பிரதமர் திரு மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

May 03rd, 02:48 pm

ஐரோப்பாவின் மூன்று நாடுகள் பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வரவேற்றார்.