சிட்னியில் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
May 24th, 04:03 pm
இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள், எஃகு, வங்கி, எரிசக்தி, சுரங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். ஆஸ்திரேலியாவின் சில முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றனர்.ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை சந்தித்தார்
May 24th, 02:48 pm
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2023 மே 24 அன்று எதிர்க்கட்சித் தலைவர் மேன்மைதங்கிய திரு பீட்டர் டத்தோன், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் சந்திப்பு
May 24th, 10:03 am
ஆஸ்திரேலியப் பிரதமர் மாண்புமிகு திரு ஆண்டனி அல்பானீசுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 24, 2023 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள அட்மிரால்டி இல்லத்தில் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.ஆஸ்திரேலிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை தொடர்பான செய்திக்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு
May 24th, 06:41 am
எனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும், அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக ஆஸ்திரேலிய மக்களுக்கும், பிரதமர் அல்பனீஸ் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் இந்தியாவிற்கு வந்த இரண்டு மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 23rd, 08:54 pm
ஆஸ்திரேலியாவின் பிரதமரும் எனது அன்பு நண்பருமான மாண்புமிகு அந்தோனி அல்பனீஸ், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு ஸ்காட் மோரிசன், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன், எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், நியூ சவுத் வேல்ஸ் அமைச்சரவையின் கௌரவ உறுப்பினர்கள், பார்மட்டா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் இன்று இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளனர்! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!சிட்னி, ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
May 23rd, 01:30 pm
சிட்னியின் குடோஸ் பேங்க் அரினாவில் 2023, மே 23 அன்று பெருந்திரளாகக் கூடியிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, கலந்துரையாடினார். ஆஸ்திரேலிய பிரதமர் மேன்மைதங்கிய திரு அந்தோணி அல்பானிஸ் உடனிருந்தார்.ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகளுடன் பிரதமரின் சந்திப்பு
May 23rd, 12:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பல்வேறு முக்கிய ஆளுமைகளை சிட்னியில் இன்று (23.05.2023) தனியே சந்தித்தார்.எஸ் கிட்மேன் & கோ, ராய்ஹில்லில் உள்ள ஹேன்காக் பிராஸ்பெக்டிங் குழுமத்தின் செயல்தலைவர் திருமதி கினா ரைன்ஹார்ட் ஏஓ உடனான பிரதமரின் சந்திப்பு
May 23rd, 09:08 am
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் 2023 மே 23 அன்று எஸ் கிட்மேன் & கோ, ராய்ஹில்லில் உள்ள ஹேன்காக் பிராஸ்பெக்டிங் குழுமத்தின் செயல்தலைவர் திருமதி கினா ரைன்ஹார்ட் ஏஓ-வை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.ஆஸ்திரேலியன்சூப்பர் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி திரு பால் ஷ்ரோடருடனான பிரதமரின் சந்திப்பு
May 23rd, 09:01 am
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2023 மே 23 அன்று ஆஸ்திரேலியன்சூப்பர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி திரு பால் ஷ்ரோடருடனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.ஃபார்டெஸ்க் மெட்டல்ஸ் குழுமம் மற்றும் ஃபார்டெஸ்க் ஃபியூச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவரும், நிறுவனருமான டாக்டர் ஆண்ட்ரூ ஃபாரஸ்ட் உடன் பிரதமர் சந்திப்பு
May 23rd, 08:58 am
ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி தொழிலதிபரான ஃபார்டெஸ்க் மெட்டல்ஸ் குழுமம் மற்றும் ஃபார்டெஸ்க் ஃபியூச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும், நிறுவனருமான டாக்டர் ஆண்ட்ரூ ஃபாரஸ்ட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னியில் மே 23, 2023 அன்று சந்தித்துப் பேசினார்.PM Modi arrives in Sydney, Australia
May 22nd, 05:43 pm
After the historic visit to Papua New Guinea, PM Modi arrived in Sydney, Australia for a bilateral visit. During the two-day visit, PM Modi will hold talks with the Prime Minister of Australia H.E Anthony Albanese, and other leaders. He will also address the community program hosted and attended by the members of the Indian diaspora at the Qudos Bank Arena in Sydney, Australiaஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவதற்கு முன்பு பிரதமர் அளித்த அறிக்கை
May 19th, 08:38 am
ஜப்பான் பிரதமர் மேதகு திரு ஃபியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அந்நாட்டின் தலைமையில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற இந்திய- ஜப்பான் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்த பிரதமர் திரு கிஷிடாவை மீண்டும் ஒரு முறை சந்திக்கவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமைத்துவம் ஏற்றுள்ள வேளையில், ஜி7 உச்சிமாநாட்டில் எனது பங்கேற்பு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. உலகம் சந்தித்து வரும் சவால்களை இணைந்து எதிர்கொள்வதன் அவசியம் குறித்து ஜி7 நாடுகள் மற்றும் இதர அழைப்பு நாடுகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் ஆவலாக இருக்கிறேன். ஹிரோஷிமா ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் ஒரு சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவிருக்கிறேன்.