ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 11:00 am
சாய் ராம்! ஆந்திர மாநில ஆளுநர் திரு அப்துல் நசீர் அவர்களே, திரு ஆர்.ஜே. ரத்னாகர் அவர்களே, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், திரு கே. சக்ரவர்த்தி அவர்களே, எனது பழைய நண்பர் திரு ரியூகோ ஹிரா அவர்களே, டாக்டர் வி. மோகன் அவர்களே, திரு எம்.எஸ். நாகானந்த் அவர்களே, திரு நிமிஷ் பாண்டியா அவர்களே, மற்ற அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் சாய் ராம்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
July 04th, 10:36 am
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீ சத்ய சாயியின் அருளாசியும், உத்வேகங்களும் இன்று நம்முடன் உள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மாநாட்டு மையத்தைப் பெற்றுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். புதிய மையம் ஆன்மீக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மீகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக மாறும் என்றும் அவர் கூறினார்.மனதின் குரல், 102ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 18.06.2023
June 18th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன். பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த முறை ஒரு வாரம் முன்னதாகவே நடைபெறுகிறது. அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன், அங்கே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; இதைக் கருத்தில் கொண்டு, அங்கே செல்லும் முன்பாகவே ஏன் உங்களிடத்திலே உரையாடக் கூடாது, இதை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும் என்று நான் கருதினேன். மக்களின் நல்லாசிகள், நீங்கள் அளிக்கும் உத்வேகம் ஆகியன என்னுடைய சக்தியை மேலும் அதிகரிக்கின்றன.குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் புதிர்வழித் தோட்டம் மற்றும் மியாவாக்கி காட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்
October 30th, 08:45 pm
புத்தர் சிலை உள்ளிட்ட வனப்பகுதியில் நடந்து சென்ற பிரதமர், அதன்பிறகு புதிர்வழித் தோட்டத்திற்குச் சென்றார். புதிய நிர்வாக கட்டிடத்தையும், ஓயோ படகு இல்லத்தையும் அவர் திறந்து வைத்தார். புதிர்வழித் தோட்டத்தையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.