வேலைவாய்ப்புத் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் 71,000க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 23rd, 11:00 am
நான் நேற்று இரவு குவைத்திலிருந்து திரும்பினேன். அங்கு, நான் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஒரு விரிவான சந்திப்பை நடத்தினேன். அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டேன். இப்போது, நான் நாடு திரும்பி வந்தவுடன், எனது முதல் நிகழ்ச்சி நம் தேசத்தின் இளைஞர்களுடனான நிகழ்ச்சியாக உள்ளது - உண்மையில் இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய நிகழ்வு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. உங்களின் பல ஆண்டுகால கனவுகள் பலனளித்துள்ளன. உங்களின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. கடந்து செல்லும் 2024-ம் ஆண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் புதிய மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்கிறது. இந்த மகத்தான தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்
December 23rd, 10:30 am
அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.வேலைவாய்ப்பு திருவிழா திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிய நியமனங்களுக்கு 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை பிரதமர் டிசம்பர் 23 அன்று விநியோகிக்கிறார்
December 22nd, 09:48 am
71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 23 அன்று காலை 10:30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
December 13th, 12:53 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும்.வேலைவாய்ப்பு திருவிழாவின் கீழ் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி பிரதமர் ஆற்றிய உரை
October 29th, 11:00 am
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள எனது அமைச்சரவை சகாக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தேசத்தின் இளம் நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 29th, 10:30 am
வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துரைக்கிறது. நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க உரிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும்.'கர்மயோகி சப்தா' – தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
October 19th, 06:57 pm
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.10.2024) தொடங்கி வைத்தார்.தேசிய கற்றல் வாரம் - ‘கர்மயோகி வாரத்தை’ அக்டோபர் 19 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
October 18th, 11:42 am
தேசிய கற்றல் வாரம் - ‘கர்மயோகி வாரத்தை’ அக்டோபர் 19 அன்று காலை 10.30 மணி அளவில் புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.வேலைவாய்ப்புத் திருவிழாவின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 12th, 11:00 am
இன்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, வேலை விளம்பரம் முதல் நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான செயல்முறை வரை கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் அதிக காலம் எடுத்தது. இது லஞ்ச கலாச்சாரத்தை வளர்த்தது. நாங்கள் இப்போது ஆட்சேர்ப்பு செயல்முறையில் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். செயல்திறன் மற்றும் நியாயத்தை உறுதி செய்துள்ளோம். ஆட்சேர்ப்பு செயல்முறை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நடைபெறுவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது, ஒவ்வொரு இளைஞருக்கும் திறன்களை வெளிப்படுத்த சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. இப்போது இளைஞர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையால் தங்களுக்கென ஒரு இடத்தைப் பெற முடியும் என்று நம்புகிறார்கள். 2014 முதல், மத்திய அரசுடன் இளைஞர்களை ஈடுபடுத்துவதும், தேச நிர்மாண முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்துவதும் எங்கள் நோக்கமாக உள்ளது. முந்தைய அரசின் கடைசி பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது பிஜேபி அரசு அதன் பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு அதிக அரசு வேலைகளை வழங்கியுள்ளது. இன்று, தில்லியில் ஒருங்கிணைந்த பயிற்சி வளாகம் ஒன்றுக்கும் நாம் அடிக்கல் நாட்டியுள்ளோம். இது நமது திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் வழங்கினார்
February 12th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். புதுதில்லியில் ஒருங்கிணைந்த வளாகமான கர்மயோகி பவன் கட்டடத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் கர்மயோகி இயக்கத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் பிப்ரவரி 12 அன்று வழங்குகிறார்
February 11th, 03:15 pm
இந்த நிகழ்ச்சியின்போது, புதுதில்லியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த வளாகமான கர்மயோகி பவன் கட்டடத்தின் முதல் கட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வளாகம் கர்மயோகி இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியைத் திறந்து வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 16th, 04:00 pm
ஆந்திரப் பிரதேச ஆளுநர் திரு எஸ். அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சர் திரு ஜெகன் மோகன் ரெட்டி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, திரு பங்கஜ் செளத்ரி அவர்களே, திரு பகவத் கிஷன்ராவ் கரத் அவர்களே, பிரதிநிதிகளே, தாய்மார்களே, பெரியோர்களே.ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் புதிய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
January 16th, 03:30 pm
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்திய வருவாய்ப் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74, 75-வது பிரிவு பயிற்சி அதிகாரிகள், பூட்டானின் ராயல் குடிமைப் பணியின் பயிற்சி அதிகாரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.வேலைவாய்ப்பு முகாமில் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 30th, 04:30 pm
நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற இயக்கம் தொடர்கிறது. இன்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனக் கடிதங்களைப் பெறுவது உங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையின் விளைவாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரை
November 30th, 04:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு விழாவில் உரையாற்றினார். புதிதாக பணியில் சேர்ந்த சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களை காணொலிக் காட்சி மூலம் வழங்கினார். நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, நிதி சேவைகள் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசுப் பணிகளில் சேருவார்கள்.வேலைவாய்ப்பு விழாவின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000- க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை நவம்பர் 30 அன்று பிரதமர் வழங்குகிறார்
November 28th, 05:19 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 நவம்பர் 30 அன்று மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் புதிதாகச் சேர்க்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டோரின் நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்நிகழ்வில் நியமிக்கப்பட்டவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 26th, 04:12 pm
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை
September 26th, 04:11 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.காணொலி மூலம் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 26th, 11:04 am
இன்றைய வேலைவாய்ப்பு மேளாவில் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் கடுமையான உழைப்புக்குப் பிறகு இந்த வெற்றியை அடைந்துள்ளீர்கள். லட்சக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்; எனவே, இந்த வெற்றி உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் உரை
September 26th, 10:38 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (26.09.2023) வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) உரையாற்றினார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை காணொலி மூலம் பிரதமர் வழங்கினார். தபால் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அரசுப் பணியில் சேரும் வகையில், நாடு முழுவதும் 46 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற்றது.