சிட்னியில் வர்த்தக வட்டமேசை மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
May 24th, 04:03 pm
இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள், எஃகு, வங்கி, எரிசக்தி, சுரங்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். ஆஸ்திரேலியாவின் சில முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் இந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றனர்.ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 10th, 12:01 pm
5000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தின் இணைப்பை இந்தத் திட்டங்கள் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். மாநிலங்களின் வளர்ச்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தில் இந்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ராஜஸ்தானும் ஒன்று. இந்த மாநிலத்தின் வளர்ச்சி இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும். அதனால்தான் நமது அரசு ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் ரூ.5500 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி முடிவுற்றப்பணிகளை அர்ப்பணித்தார்
May 10th, 12:00 pm
ராஜஸ்தான் மாநிலம் நத்தட்வாராவில் ரூ.5500 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி முடிவுற்றப்பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இப்பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதை இத்திட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. சாலை மற்றும் ரயில்வே திட்டங்கள் சரக்கு மற்றும் சேவை நடவடிக்கைகளில் வசதிகளை ஏற்படுத்துவதுடன் வர்த்தகத்திற்கு ஊக்கமளித்து இப்பிராந்தியத்தில் மக்களின் சமூகப் பொருளாதார நிலையையும் மேம்படுத்தும்.மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 11th, 05:00 pm
மத்தியப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரை உற்சாகமாக வரவேற்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் மத்தியப்பிரதேசத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது. நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தில் தொடங்கி சுற்றுலாத்துறை வரையிலும், வேளாண்மையில் தொடங்கி கல்வி மற்றும் திறன் மேம்பாடு வரையிலும், சாதனைப் படைத்த மத்தியப்பிரதேசம் ஒரு வியத்தகு மாநிலம்..மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023-ல் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் உரை
January 11th, 11:10 am
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலமாக இன்று (11.01.2023) உரையாற்றினார். அப்போது இந்த உச்சிமாநாடு மத்தியப்பிரதேசத்தின் பல்துறை சார்ந்த முதலீட்டாளர் வாய்ப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகக் கூறினார். உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் மத்தியப்பிரதேசத்தின் பங்களிப்புக் குறித்தும் எடுத்துரைத்தார்.‘உலகத்திற்காக இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமரின் உரை
March 03rd, 10:08 am
‘சுயசார்பு இந்தியா’ மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ போன்ற திட்டங்கள் தொடர்பாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நமது தொழில் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் மிகவும் முக்கியமானவை. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ பிரச்சாரம் 21-ம் நூற்றாண்டின் நாட்டின் தேவையாகவும், உலகிற்கு நமது திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.‘உலகத்திற்காக இந்தியாவில் உற்பத்தி’ என்பது குறித்த டிபிஐஐடி இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
March 03rd, 10:07 am
தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை (டிபிஐஐடி) ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திரு மோடி இன்று உரையாற்றினார். பிரதமரால் உரை நிகழ்த்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய எட்டாவது இணையவழிக் கருத்தரங்காகும் இது. இந்தக் கருத்தரங்கிற்கு உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்பது மையப் பொருளாக இருந்தது.பிரதமரின் விரைவு சக்தி எனும் பன்முனை தொடர்புக்கான தேசியப் பெருந்திட்ட தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம்
October 13th, 11:55 am
மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு நிதின் கட்கரி அவர்களே, திரு பியூஷ் கோயல் அவர்களே, திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ராஜ்குமார் சிங் அவர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே துணை நிலை ஆளுநர்களே, மாநில அமைச்சர்களே, தொழில்துறை நண்பர்களே, மற்ற பிரமுகர்களே, எனதருமை சகோதரர்களே, சகோதரிகளே,பிரதமரின் கதி (அதிவிரைவு) சக்தி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 13th, 11:54 am
பிரதமரின் அதிவிரைவுத் திட்டம் பன்முனை இணைப்புக்கான தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கினார். பிரகதி மைதானத்தில் புதிய கண்காட்சி வளாகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு நிதின் கட்கரி. திரு பியூஷ் கோயல், திரு ஹர்தீப் சிங் பூரி, திரு சர்பானந்த சோனாவால், திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு ஆர் கே சிங், மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், மாநில அமைச்சர்கள், பிரபல தொழிலதிபர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொழில்துறையிலிருந்து ஆதித்ய பிர்லா குழுமத்தலைவர் திரு குமாரமங்கலம் பிர்லா, டிராக்டர்ஸ் & ஃபார்ம் எக்யூப்மென்ட்ஸ் தலைமை நிர்வாக இயக்குநர் திருமிகு மல்லிகா சீனிவாசன், டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் திரு டி வி நரேந்திரன், சிஐஐஏ தலைவர் மற்றும் ரிவிகோ நிறுவனத்தின் துணை நிர்வாகி திரு தீபக் கார்க் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.இந்திய விண்வெளி சங்கத்தின் துவக்க விழாவில் பிரதமரின் உரையின் மொழிபெயர்ப்பு
October 11th, 11:19 am
நாட்டின் இரண்டு தவப்புதல்வர்களான பாரத ரத்னா திரு ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் மற்றும் பாரத ரத்னா ஸ்ரீ நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்தநாள் இன்று. இந்த இரண்டு பெரிய ஆளுமைகளும் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவுக்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்கு வகித்தனர். அனைவரையும் அரவணைத்து செல்வதன் மூலமும் ஒவ்வொருவரின் முயற்சியின் மூலமும் தேசத்தில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர்களின் வாழ்க்கைத் தத்துவம் நம்மை ஊக்குவிக்கிறது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் மற்றும் நானாஜி தேஷ்முக் அவர்கள் ஆகியோரை வணங்கி எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.இந்திய விண்வெளி சங்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
October 11th, 11:18 am
இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தலைவர்கள்; வணிகம் மற்றும் வர்த்தகத் துறையின் பங்குதாரர்கள் ஆகியோருடன் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 06th, 06:31 pm
ஏற்றுமதியை அதிகரிக்க நான்கு காரணிகள் மிக முக்கியமானவை. முதலாவதாக, நாட்டில் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் அது தரமான போட்டியாக இருக்க வேண்டும். விலையை விட தரத்தில் அதிக கவனம் செலுத்தும் போக்கும் உலகில் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக, போக்குவரத்து சிக்கல்கள் களையப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் இதற்கு, பங்காற்ற வேண்டும். மூன்றாவதாக, அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுடன் தோளோடு தோள் நடக்க வேண்டும். நான்காவதாக, இந்திய பொருட்களுக்கான சர்வதேச சந்தை. இந்த நான்கு காரணிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியாவின் உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக இருக்கும், அப்போதுதான் உலகிற்கான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்ற இலக்கை நாம் சிறந்த முறையில் அடைய முடியும்.வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தக வணிகத் துறையினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 06th, 06:30 pm
ஒரு புதிய முயற்சியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தகம் & வணிகத் துறையினருடன், காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்த கலந்துரையாடலின்போது உடனிருந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாநில அரசுகளின் அதிகாரிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் வணிகர் பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.விவாடெக்கின் ஐந்தாம் பதிப்பில் பிரதமரின் உரை
June 16th, 04:00 pm
பிரெஞ்ச் ஓபன் போட்டிகளை ஏராளமான இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்தனர். இந்திய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், இந்தப் போட்டிக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை அளித்தது. அதேபோல பிரான்ஸ் நிறுவனமான ஏடாஸ், இந்தியாவில் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் கேப்ஜெமினி அல்லது இந்தியாவின் டிசிஎஸ், விப்ரோ என நமது தொழில்நுட்ப திறமையாளர்கள் உலகெங்கும் உள்ள நிறுவனங்கள் மற்றும் மக்களுக்காக சேவையாற்றுகிறார்கள்.விவாடெக் மாநாட்டின் ஐந்தாவது பதிப்பில் பிரதமர் சிறப்புரையாற்றினார்
June 16th, 03:46 pm
விவாடெக்கின் ஐந்தாவது பதிப்பில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். 2016 முதல் பாரிஸ் நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகளில் ஒன்றான விவாடெக்கில் சிறப்புரை ஆற்ற மதிப்புறு விருந்தினராக பிரதமர் அழைக்கப்பட்டிருந்தார்.Indian economy is recovering at a swift pace and economic indicators are encouraging: PM Modi
December 12th, 11:01 am
PM Modi addressed 93rd Annual General Meeting of FICCI. In his remarks, PM Modi said the Indian economy is recovering at a swift pace and economic indicators are encouraging. He said the world's confidence in India has strengthened over the past months, record FDIs have been received. Further speaking about the farm reforms, he said, With new agricultural reforms, farmers will get new markets, new options.PM Modi delivers keynote address at 93rd Annual General Meeting of FICCI
December 12th, 11:00 am
PM Modi addressed 93rd Annual General Meeting of FICCI. In his remarks, PM Modi said the Indian economy is recovering at a swift pace and economic indicators are encouraging. He said the world's confidence in India has strengthened over the past months, record FDIs have been received. Further speaking about the farm reforms, he said, With new agricultural reforms, farmers will get new markets, new options.India knows how to befriend as well as to give befitting reply: PM Modi during Mann Ki Baat
June 28th, 11:00 am
During Mann Ki Baat, Prime Minister Modi spoke on a range of subjects including India’s fight against COVID-19, the situation in Ladakh and the country’s unlock phase. The PM also pitched for ‘vocal for local’, saying it would help the country become self-reliant.India will overcome the COVID-19 pandemic & the nation will turn this crisis into an opportunity: PM
June 18th, 10:24 am
PM Modi launched auction process of 41 coal blocks for commercial mining. He said that the move was aimed at achieving self-sufficiency in meeting energy needs and strengthening the country's industrial development. PM Modi remarked, This auction process for commercial coal mines is a win-win situation for all stakeholders.PM Modi launches auction process of 41 coal blocks for commercial mining
June 18th, 10:23 am
PM Modi launched auction process of 41 coal blocks for commercial mining. He said that the move was aimed at achieving self-sufficiency in meeting energy needs and strengthening the country's industrial development. PM Modi remarked, This auction process for commercial coal mines is a win-win situation for all stakeholders.