பார்படோஸ் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

November 21st, 09:13 am

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்படாஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லியை நவம்பர் 20 அன்று சந்தித்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் பார்படாஸ் இடையேயான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் இரு தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது.

டொமினிகாவின் உயரிய தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

November 21st, 05:39 am

பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு டொமினிகா அதிபர் திருமதி சில்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கௌரவ விருதை வழங்கினார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. டொமினிக்கா பிரதமர் திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பார்படோஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல், செயிண்ட் லூசியா பிரதமர் திரு பிலிப் ஜே. பியரி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. காஸ்டன் பிரவுன் ஆகியோரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.

இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 21st, 02:15 am

எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு

November 21st, 02:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்: