குஜராத்தில் கோச்ராப் ஆசிரமத் தொடக்க விழா மற்றும் சபர்மதி ஆசிரமப் பெருந்திட்டத் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
March 12th, 10:45 am
பூஜ்ய பாபுவின் சபர்மதி ஆசிரமம் தொடர்ந்து இணையற்ற சக்தியை வெளிப்படுத்தி, ஒரு துடிப்பான மையமாக செயல்பட்டு வருகிறது. மற்ற பலரைப் போலவே, நாமும் அங்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் போதெல்லாம், அண்ணலின் நீடித்த உத்வேகத்தை உணர்வோம். சபர்மதி ஆசிரமம், உண்மை, அகிம்சை, தேசத்தின் மீதான பக்தி, அண்ணலால் போற்றப்படும் ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வு ஆகியவற்றின் விழுமியங்களை இன்றும் உயர்த்திப் பிடித்து வருகிறது. சபர்மதி ஆசிரமத்தின் மறுமேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு இன்று நான் அடிக்கல் நாட்டியிருப்பது உண்மையிலேயே புனிதமானது. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அண்ணல் வசித்த கோச்ராப் ஆசிரமமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது; இன்று அதன் திறப்பு விழாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கோச்ராப் ஆசிரமத்தில்தான் காந்திஜி முதன்முதலில் ராட்டை நூற்பதில் ஈடுபட்டு தச்சு வேலைகளைக் கற்றுக்கொண்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த பிறகு, காந்திஜி சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். அதன் புனரமைப்புடன், காந்திஜியின் ஆரம்ப நாட்களின் நினைவுகள் கோச்ராப் ஆசிரமத்தில் சிறப்பாக பாதுகாக்கப்படும். நான் வணக்கத்துக்குரிய அண்ணலுக்கு என் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் இடங்களை உருவாக்கியதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத் மாநிலம் சபர்மதியில் கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் திறந்து வைத்தார்
March 12th, 10:17 am
சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கோச்ராப் ஆசிரமத்தை திறந்து வைத்து, காந்தி ஆசிரம நினைவிடத்தின் பெருந்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், ஹ்ரிதய் குஞ்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் காந்தி இல்லத்தையும் பார்வையிட்டார். மேலும் கண்காட்சியை பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.மனதின் குரல், டிசம்பர் 2023
December 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.The soil of India creates an affinity for the soul towards spirituality: PM Modi
October 31st, 09:23 pm
PM Modi participated in the programme marking the culmination of Meri Maati Mera Desh campaign’s Amrit Kalash Yatra at Kartavya Path in New Delhi. Addressing the gathering, PM Modi said, Dandi March reignited the flame of independence while Amrit Kaal is turning out to be the resolution of the 75-year-old journey of India’s development journey.” He underlined that the 2 year long celebrations of Azadi Ka Amrit Mahotsav are coming to a conclusion with the ‘Meri Maati Mera Desh’ Abhiyan.PM participates in program marking culmination of Meri Maati Mera Desh campaign’s Amrit Kalash Yatra
October 31st, 05:27 pm
PM Modi participated in the programme marking the culmination of Meri Maati Mera Desh campaign’s Amrit Kalash Yatra at Kartavya Path in New Delhi. Addressing the gathering, PM Modi said, Dandi March reignited the flame of independence while Amrit Kaal is turning out to be the resolution of the 75-year-old journey of India’s development journey.” He underlined that the 2 year long celebrations of Azadi Ka Amrit Mahotsav are coming to a conclusion with the ‘Meri Maati Mera Desh’ Abhiyan.Amrit Kalash Yatra: PM to participate in programme marking culmination of Meri Maati Mera Desh campaign
October 30th, 09:11 am
PM Modi will participate in the programme marking the culmination of Meri Maati - Mera Desh campaign’s Amrit Kalash Yatra at Kartavya Path. The programme will also mark the closing ceremony of Azadi Ka Amrit Mahotsav. Meri Maati Mera Desh campaign is a tribute to the Veers and Veeranganas who have made the supreme sacrifice for the country.மீராபாய் நம் நாட்டு பெண்களுக்கு ஒரு உத்வேகம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
October 29th, 11:00 am
எனதருமை குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பகுதி வெளியாகும் வேளையில், நாடு முழுவதிலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது, வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்கள் அனைவருமே கூட பலப்பல நல்வாழ்த்துக்கள்.என் மண் என் தேசம் கீதம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் ஆழமாக ஒலிக்கிறது: பிரதமர்
September 01st, 10:57 pm
என் மண் என் தேசம் கீதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.என் மண் என் தேசம் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு குடிமக்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்
September 01st, 10:55 pm
என் மண் என் தேசம் பிரச்சாரம் வெற்றிபெற வாழ்த்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மண்ணால் தயாரிக்கப்பட்ட 'வாடிகா' 'ஒரே பாரதம் உன்னத பாரதம் ' லட்சியத்தை உணர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.