டிரினிடாட் & டொபாகோ பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

November 21st, 10:42 pm

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டிரினிடாட் & டொபாகோ குடியரசின் பிரதமர் மேதகு டாக்டர் கீத் ரவுலேவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.

டி-20 உலக சாம்பியன் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் நிகழ்த்திய உரையாடலின் தமிழாக்கம்

July 05th, 04:00 pm

நண்பர்களே, வருக! நாட்டை உற்சாகத்தாலும், கொண்டாட்டத்தாலும் நீங்கள் எவ்வாறு நிரப்பியிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். நமது நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நீங்கள் விஞ்சிவிட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! வழக்கமாக இரவு நேரத்தில் நான் அலுவலகத்தில் வெகுநேரம் பணியாற்றுகிறேன். ஆனால் இந்த நேரத்தில் தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருந்தது. எனது கோப்புகளில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. நீங்கள் குறிப்பிடத்தக்க அணி உணர்வையும், திறமையையும், பொறுமையையும் வெளிப்படுத்தினீர்கள். நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாக இருந்தீர்கள். எனவே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024-ஐ வென்றவர்களுக்கு பிரதமர் விருந்தளித்தார்

July 04th, 02:40 pm

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்தளித்தார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்

June 30th, 02:06 pm

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30-06-2024) தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். போட்டியில் அணி வீரர்கள் வெளிப்படுத்திய திறன்களையும் அவர்களது சிறந்த உணர்வையும் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

June 29th, 11:56 pm

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணத்தின்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 22nd, 01:00 pm

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து முறை சந்தித்திருந்தாலும், இன்றைய கூட்டம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் எங்களது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா எங்களது முதல் அரசு விருந்தினராக இப்போது வந்துள்ளார்.

மனதின் குரல், டிசம்பர் 2023

December 31st, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.

"நாங்கள் இன்றும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்" : இந்திய அணிக்குப் பிரதமர் உறுதி

November 19th, 09:40 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 19th, 09:35 pm

உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 19th, 12:44 pm

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

India is poised to continue its trajectory of success: PM Modi

November 17th, 08:44 pm

Speaking at the BJP's Diwali Milan event at the party's headquarters in New Delhi, Prime Minister Narendra Modi reiterated his commitment to transform India into a 'Viksit Bharat,' emphasizing that these are not merely words but a ground reality. He also noted that the 'vocal for local' initiative has garnered significant support from the people.

PM Modi addresses Diwali Milan programme at BJP HQ, New Delhi

November 17th, 04:42 pm

Speaking at the BJP's Diwali Milan event at the party's headquarters in New Delhi, Prime Minister Narendra Modi reiterated his commitment to transform India into a 'Viksit Bharat,' emphasizing that these are not merely words but a ground reality. He also noted that the 'vocal for local' initiative has garnered significant support from the people.

ஐசிசி உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

November 15th, 11:51 pm

ஐசிசி உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் வெற்றி பெறவும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

November 05th, 10:22 pm

நடப்பு உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 02nd, 10:51 pm

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து

October 22nd, 11:23 pm

ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் நியூசிலாந்துக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றதற்கு பிரதமர் பாராட்டு

October 19th, 10:25 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்தியக் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 141 வது அமர்வு தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 14th, 10:34 pm

ஐ.ஓ.சி. தலைவர் திரு தாமஸ் பாக் அவர்களே, ஐ.ஓ.சி.யின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, அனைத்து சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே, இந்தியாவில் உள்ள தேசியக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளே உங்கள் அனைவரையும் இந்த சிறப்பான தருணத்தில் 1.4 பில்லியன் இந்தியர்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.

மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 14th, 06:35 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வை இன்று தொடங்கி வைத்தார். விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பை இந்த அமர்வு வழங்குகிறது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணிக்குப் பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 11th, 11:14 pm

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக இந்தியக் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.