கொரோனோ பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் 130 கோடிப் பேர் காட்டிய உறுதிப்பாடு புதிய இந்தியாவின் வலிமைக்கு சான்றாகும் : பிரதமர்
April 12th, 01:23 pm
உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி செலுத்துவதாக இருந்தாலும் அல்லது மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக இருந்தாலும், சுகாதாரத்துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கொரோனோ பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் 130 கோடிப் பேர் காட்டிய உறுதிப்பாடு புதிய இந்தியாவின் வலிமைக்கு சான்றாகும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.சுகாதாரத் துறையில் மத்திய பட்ஜெட்டின் நேர்மறையான தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 26th, 02:08 pm
கடந்த 7 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமது சுகாதார சேவையில் நாம் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறோம். தற்போது சுகாதாரத்தில் மட்டுமின்றி, அதற்கு சமமாக நல வாழ்விலும் கவனம் செலுத்தப்படுகிறது.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் தொடங்கி வைத்தார்
February 26th, 09:35 am
மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் பங்கேற்கும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகளில் இது ஐந்தாவதாகும். மத்திய அமைச்சர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார மேலாண்மை, தொழிற்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர்.சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாக திறப்பு விழாவில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
January 07th, 01:01 pm
மாண்புமிகு மேற்கு வங்க முதல்வர் திருமிகு. மம்தா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு. சுபாஸ் சர்க்கார் அவர்களே, திரு. சாந்தனு தாகூர் அவர்களே, திரு.ஜான் பர்லா அவர்களே மற்றும் திரு. நிசித் பிரமானிக் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு. சுவேந்து அதிகாரி அவர்களே, இதர முக்கிய பிரமுகர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
January 07th, 01:00 pm
கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் சுபாஷ் சர்க்கார், திரு சந்தானு தாக்கூர், திரு ஜான் பிர்லா, திரு நிதிஷ் பிரமாணிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கொவிட்-19, ஓமிக்ரான் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளின் தயார்நிலை நிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
December 23rd, 10:07 pm
கொவிட்-19 மற்றும், கவலை அளிக்கும் புதிய மாறுபடு அடைந்துள்ள ஓமிக்ரான், பொது சுகாதார கட்டுப்பட்டு நடவடிக்கைகள், கொவிட்-19 கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை, மருந்துகள் கிடைப்பது, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், சுவாசக் கருவிகள், பிராண வாயு ஆலைகள், தீவிர சிகிச்சை பிரிவு/ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், மனித வளங்கள், தகவல் தொழில்நுட்ப தலையீடுகள் மற்றும் தடுப்பூசி நிலை உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்Double Engine Government of Uttar Pradesh is the result of decades of hard work of many Karma Yogis: PM
October 25th, 01:33 pm
Prime Minister Narendra Modi launched PM Ayushman Bharat Health Infrastructure Mission. Addressing a gathering he said, Those whose governments remained in the country for a long time, instead of the all-around development of the country's healthcare system, kept it deprived of facilities.பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
October 25th, 01:30 pm
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைத் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாரணாசிக்கான ரூ. 5,200 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். உத்தரப் பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் டாக்டர். மன்ஷூக் மண்டாவியா, டாக்டர். மஹேந்திர நாத் பாண்டே, இணை அமைச்சர்கள், மக்களின் பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.கோவாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி பயனாளிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
September 18th, 10:31 am
ஆற்றல் மிக்க மற்றும் பிரபலமான கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, என்னுடன் பணியாற்றும் மத்திய அமைச்சரும், கோவாவின் புதல்வருமான ஸ்ரீபத் நாயக் அவர்களே, மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் அவர்களே, கோவா அமைச்சர்களே, எம்.பி.க்களே மற்றும் எம்.எல்ஏ.க்களே, சகோதர, சகோதரிகளே!கோவாவில் கோவிட் தடுப்பூசி பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
September 18th, 10:30 am
கோவாவில் வயது வந்தோர் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அடுத்து, பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தலைவர்கள்; வணிகம் மற்றும் வர்த்தகத் துறையின் பங்குதாரர்கள் ஆகியோருடன் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 06th, 06:31 pm
ஏற்றுமதியை அதிகரிக்க நான்கு காரணிகள் மிக முக்கியமானவை. முதலாவதாக, நாட்டில் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் அது தரமான போட்டியாக இருக்க வேண்டும். விலையை விட தரத்தில் அதிக கவனம் செலுத்தும் போக்கும் உலகில் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக, போக்குவரத்து சிக்கல்கள் களையப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் இதற்கு, பங்காற்ற வேண்டும். மூன்றாவதாக, அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுடன் தோளோடு தோள் நடக்க வேண்டும். நான்காவதாக, இந்திய பொருட்களுக்கான சர்வதேச சந்தை. இந்த நான்கு காரணிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியாவின் உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக இருக்கும், அப்போதுதான் உலகிற்கான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்ற இலக்கை நாம் சிறந்த முறையில் அடைய முடியும்.வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தக வணிகத் துறையினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 06th, 06:30 pm
ஒரு புதிய முயற்சியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தகம் & வணிகத் துறையினருடன், காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்த கலந்துரையாடலின்போது உடனிருந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாநில அரசுகளின் அதிகாரிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் வணிகர் பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.குஜராத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரை
August 03rd, 12:31 pm
குஜராத் முதல்வர் திரு விஜய் கனரூபானி அவர்களே, துணை முதல்வர் திரு நிதின்பாய் படேல் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சக நண்பரும், குஜராத் பாஜக தலைவருமான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளே, சகோதர, சகோதரிகளே!குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
August 03rd, 12:30 pm
குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இத்திட்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, குஜராத்தில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டம் தொடங்கப்பட்டது.கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான குறுகியகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்
June 18th, 09:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கோவிட்-19 முன்களப்பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்தப் பயிற்சி திட்டம் 26 மாநிலங்களில் உள்ள 111 பயிற்சி மையங்களில் நடத்தப்படும். இந்த முன்முயற்சி மூலம் சுமார் ஒரு லட்சம் முன்களப் பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் பல மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.கொவிட்-19 முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 18th, 09:43 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கோவிட்-19 முன்களப்பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்தப் பயிற்சி திட்டம் 26 மாநிலங்களில் உள்ள 111 பயிற்சி மையங்களில் நடத்தப்படும். இந்த முன்முயற்சி மூலம் சுமார் ஒரு லட்சம் முன்களப் பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் பல மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.கொவிட்-19 முன்களப் பணியாளர்களுக்கு ஜூன் 18ம் தேதி திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
June 16th, 02:33 pm
கொவிட் முன்களப் பணியாளர்களுக்கு ‘திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியை’ 2021 ஜூன் 18ம் தேதி அன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.