
பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் மசார்குஸ் போர் நினைவிடத்தைப் பார்வையிட்டனர்
February 12th, 04:57 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரானும் இன்று காலை மார்சேயில் உள்ள மசார்குஸ் போர் நினைவிடத்திற்குச் சென்று முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். உயிர்நீத்த வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இரு தலைவர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்கள்.