மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் நவின் ராம்கூலமின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 11th, 08:57 pm

மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் நவின் ராம்கூலமின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

August 15th, 09:20 pm

பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் பிரதமர் வாழ்த்து

June 05th, 10:08 pm

மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் கே. ஜுக்நாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஜுக்நாத், மோடியின் தலைமையின் மீது உலகின் மிகப்பெரிய வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா-மொரீஷியஸ்: திட்டங்களின் மெய்நிகர் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 29th, 01:15 pm

கடந்த 6 மாதங்களில் பிரதமர் ஜுக்னவுத்துக்கும் எனக்கும் இடையே நடைபெறும் ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான துடிப்பான, வலுவான மற்றும் தனித்துவமான கூட்டாண்மைக்கு இது ஒரு சான்றாகும். நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் முக்கிய பங்கெடுப்பாளராக மொரீஷியஸ் திகழ்கிறது.

மொரீஷியஸ் நாட்டில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், படகுத்துறையைப் பிரதமரும், மொரீஷியஸ் பிரதமரும் இணைந்து தொடங்கி வைத்தனர்

February 29th, 01:00 pm

மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் இன்று காணொலி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இது மொரீஷியஸ் மற்றும் அகலேகா இடையேயான சிறந்த போக்குவரத்துக்கான தேவையை நிறைவேற்றுவதாகவும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதாகவும் அமையும். 2024 பிப்ரவரி 12 அன்று இரு தலைவர்களும் மொரீஷியஸில் யுபிஐ, ரூபே அட்டை சேவைகளை தொடங்கியதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களின் தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம் மற்றும் படகுத்துறையை திறந்து வைக்கின்றனர்

February 27th, 06:42 pm

மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் 2024 பிப்ரவரி 29 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து புதிய விமான ஓடுபாதை, செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை மற்றும் ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை திறந்து வைக்க உள்ளனர்.

இலங்கை மற்றும் மொரீஷியஸில் யு.பி.ஐ சேவைகளைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 12th, 01:30 pm

மேதகு அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களே, மேதகு பிரதமர் திரு பிரவிந்த் ஜுக்நாத் அவர்களே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களே, இலங்கை, மொரீஷியஸ் மற்றும் பாரத மத்திய வங்கிகளின் மதிப்புமிக்க ஆளுநர்களே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மதிப்பிற்குரியவர்களே அனைவருக்கும் வணக்கம்!

மொரீஷியஸ் பிரதமருடனும் இலங்கை அதிபருடனும் இணைந்து யுபிஐ சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

February 12th, 01:00 pm

இலங்கை அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவைகளை தொடங்கி வைக்க உள்ளனர்

February 11th, 03:13 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் 2024 பிப்ரவரி 12 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர்.

குடியரசு தின வாழ்த்து கூறிய மொரீஷியஸ் பிரதமருக்குத் திரு மோடி நன்றி தெரிவித்துள்ளார்

January 26th, 10:52 pm

குடியரசு தின தினத்தை முன்னிட்டு மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் கூறிய வாழ்த்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மொரீஷியஸ் மக்கள் பாடிய ஸ்ரீ ராம பக்தி குறித்த பஜனை மற்றும் கதைகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 20th, 09:27 am

மொரீஷியஸ் மக்கள் பாடிய ஸ்ரீ ராம பக்தி குறித்த பஜனை மற்றும் கதைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (ஜி.பி.ஏ) அறிமுகம்

September 09th, 10:30 pm

சிங்கப்பூர், வங்கதேசம், இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 9 செப்டம்பர் 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.

உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை (பிஜிஐஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் நடைபாதை (ஐஎம்இசி)

September 09th, 09:40 pm

புதுதில்லியில் செப்டம்பர் 9, 2023 அன்று நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை (பிஜிஐஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) குறித்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி திரு ஜோ பைடன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.

உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான கூட்டாண்மை (பி.ஜி.ஐ.ஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்த நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 09th, 09:27 pm

இந்த சிறப்பு நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். எனது நண்பர் அதிபர் திரு பைடனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, நாம் அனைவரும் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதைக் கண்டோம். இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்புக்கான ஒரு பயனுள்ள ஊடகமாக வரும் காலங்களில் இது மாறும்.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்னாத்தை பிரதமர் சந்தித்தார்

September 08th, 08:01 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜக்னாத்தை 8 செப்டம்பர் 2023 அன்று சந்தித்தார். தில்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் 'விருந்தினர் நாடாக' பங்கேற்க மொரீஷியஸுக்கு விடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பிற்கு பிரதமர் ஜுக்நாத் நன்றி தெரிவித்தார். இந்திய தலைமைத்துவத்தின் கீழ் ஜி 20 நாடுகளின் பல்வேறு பணிக்குழுக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டங்களில் மொரீஷியஸ் தீவிரமாக பங்கேற்றதை பிரதமர் பாராட்டினார்.

மொரீஷியஸ் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்

September 08th, 01:40 pm

மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜுக்நாத், பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் இன்று மாலை இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

77வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் நன்றி

August 15th, 04:21 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 77வது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மொரிஷியஸில் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

May 01st, 03:46 pm

மொரிஷியஸில் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி

January 26th, 09:43 pm

இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

76- வது சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி

August 15th, 10:47 pm

76-வது சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.