அயோத்தியில் ஸ்ரீ ராமரின் பிரதிஷ்டை குறித்துப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியின் தமிழாக்கம்

January 12th, 11:00 am

இன்று அனைத்து இந்தியர்களுக்கும், உலகெங்கிலும் பரவியுள்ள ராமரின் பக்தர்களுக்கும் ஒரு புனிதமான தருணம்! எங்கு பார்த்தாலும் ராமர் மீது பக்தி பொங்கும் சூழல்! ராமரின் இனிமையான கோஷங்கள், எல்லா திசைகளிலும் ராம பஜனைகளின் நேர்த்தியான அழகு! அந்த வரலாற்று சிறப்புமிக்க புனிதத் தருணமான ஜனவரி 22-ம் தேதியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய இன்னும் 11 நாட்களே உள்ளன. இந்த மங்களகரமான நிகழ்வைக் காண நான் என்னை அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். கற்பனைக்கு அப்பாற்பட்ட தருணங்களை நான் அனுபவிக்கும் நேரம் இது.

ஸ்ரீ ராம்லாலாவின் பிரான பிரதிஷ்டாவுக்கான 11 நாள் சிறப்பு வழிபாட்டை பிரதமர் தொடங்கினார்

January 12th, 10:31 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜனவரி 22 அன்று அயோத்தி தாமில் உள்ள கோவிலில் ஸ்ரீ ராம்லாலாவின் பிரான பிரதிஷ்டத்தை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்கை இன்று தொடங்கியுள்ளார். இது ஒரு மிகப் பெரிய பொறுப்பு. தவிர, நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, கடவுள் வழிபாட்டிற்காக நமக்குள் யோகா மற்றும் தெய்வீக உணர்வை எழுப்ப வேண்டும். இதற்காக, குடமுழுக்கு நிகழ்வுக்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் மற்றும் கடுமையான விதிகள் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, ஆன்மீகப் பயணத்தில் சில புண்ணிய ஆத்மாக்கள் மற்றும் மகான்களிடமிருந்து எனக்குக் கிடைத்த வழிகாட்டுதலின்படியும், அவர்கள் பரிந்துரைத்த 'யம நியமங்களின்' படியும், இன்று முதல் 11 நாட்களுக்கு ஒரு சிறப்பு சடங்கைத் தொடங்குகிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.