Prime Minister pays homage to martyrs of the 2001 Parliament attack

December 13th, 10:21 am

The Prime Minister Shri Narendra Modi today paid homage to those martyred in the 2001 Parliament attack.

In Kargil, we didn't just win a war; we showcased the incredible strength of truth, restraint, and capability: PM Modi in Ladakh

July 26th, 09:30 am

PM Modi paid homage to the bravehearts who made the supreme sacrifice in the line of duty on the occasion of 25th Kargil Vijay Diwas in Ladakh. “In Kargil, we not only won the war, we presented an incredible example of 'truth, restraint and strength”, Prime Minister Modi remarked.

கார்கில் வெற்றி தினத்தை பிரதமர் லடாக் பயணம் போரில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

July 26th, 09:20 am

25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். போரில் உயிர்த்தியாகம் புரிந்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கார்கில் போர் குறித்து கேட்டறிந்த பிரதமர், அழியாத நினைவு குடிலையும், வீர பூமியையும் பார்வையிட்டார்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

February 14th, 11:10 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2019-ம் ஆண்டில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜய் தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

December 16th, 09:44 am

விஜய் திவஸ் எனப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவுக்காக கடமை உணர்வுடன் சேவை செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்

December 13th, 09:47 am

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இதயபூர்வமான அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வெற்றி தினத்தையொட்டி ராணுவ இல்லத்தின் வரவேற்பில் பிரதமர் பங்கேற்பு

December 15th, 08:13 pm

வெற்றி தினத்தையொட்டி ராணுவ இல்லத்தின் வரவேற்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

நமது இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 31st, 11:30 am

நண்பர்களே, ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

தண்ணீரை சேமிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

March 27th, 11:00 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இது நம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது.

இந்திய கலாசாரத்தின் அதிர்வு உலகெங்கிலும் உள்ள மக்களை எப்போதும் ஈர்த்துள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

January 30th, 11:30 am

நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

December 13th, 11:42 am

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதலின் போது பணியில் இருந்து உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் பாதுகாப்பு படைவீரர்களுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகனங்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்

November 13th, 07:15 pm

மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகனங்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று வீர மரணமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

புதுதில்லியில் பாதுகாப்பு அலுவலக வளாக திறப்பு விழாவில் பிரதமர் அற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

September 16th, 11:01 am

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது மூத்த அமைச்சரவை தோழர்கள் திரு. ராஜ்நாத் சிங், திரு.ஹர்தீப் சிங் பூரி, அஜய் பட், கவுசல் கிஷோர், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், முப்படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள், பெரியோர்களே, தாய்மார்களே, 75-வது சுதந்திர ஆண்டில், புதிய இந்தியாவின் விருப்பப்படி, நாட்டின் தலைநகரை மேம்படுத்தும் முக்கியமான நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். இந்த புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், நமது படைகள் மேலும் திறமையுடனும், வசதியாகவும் இயங்க உதவும். இந்த புதிய அலுவலக உருவாக்கத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூவில் பாதுகாப்பு அலுவலக வளாகங்களை பிரதமர் திறந்து வைத்தார்

September 16th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூவில் பாதுகாப்பு அலுவலக வளாகங்களை இன்று திறந்து வைத்தார். ஆப்பிரிக்க அவென்யூவில் உள்ள பாதுகாப்பு அலுவலகம் வளாகத்திற்கு நேரில் சென்ற அவர், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் நவீன ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரை

August 28th, 08:48 pm

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பஞ்சாப் ஆளுநர் திரு.வி.பி.சிங் பட்னோர் அவர்களே, முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அவர்களே, எனது அமைச்சரவைத் தோழர்கள் திரு.கிஷண் ரெட்டி அவர்களே, திரு.அர்ஜூன்ராம் மெக்வால் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களே, சகோதர,சகோதரிகளே வணக்கம்!

புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலா பாக் நினைவிட வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

August 28th, 08:46 pm

ஜாலியன் வாலா பாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியின்போது, நினைவிடத்தில் அருங்காட்சியக கூடங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த வளாகத்தை மேம்படுத்த மத்திய அரசு எடுத்த பல வளர்ச்சி நடவடிக்கைகளை இந்த நிகழ்வு, காட்டுகிறது.

புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவக காட்சிகள்.

August 27th, 07:38 am

ஆகஸ்ட் 28, சனிக்கிழமை, புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவக வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அவர் நினைவகத்தில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகக் காட்சியகங்களைத் திறந்து வைப்பார். இந்த வளாகத்தை மேம்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள பல மேம்பாட்டு முயற்சிகளையும் இந்த நிகழ்ச்சி காட்சிப்படுத்தும்.

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

August 26th, 06:51 pm

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை 2021 ஆகஸ்ட் 28 அன்று மாலை 6.25 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நினைவிடத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக காட்சிக் கூடங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார். வளாகத்தை மேம்படுத்த அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நிகழ்ச்சியின் போது விளக்கப்படும்.

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் நினைவஞ்சலி

April 13th, 09:25 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தமது இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை

March 23rd, 09:08 am

தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.