இந்திய விண்வெளி சங்கத்தின் துவக்க விழாவில் பிரதமரின் உரையின் மொழிபெயர்ப்பு

October 11th, 11:19 am

நாட்டின் இரண்டு தவப்புதல்வர்களான பாரத ரத்னா திரு ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் மற்றும் பாரத ரத்னா ஸ்ரீ நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்தநாள் இன்று. இந்த இரண்டு பெரிய ஆளுமைகளும் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவுக்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்கு வகித்தனர். அனைவரையும் அரவணைத்து செல்வதன் மூலமும் ஒவ்வொருவரின் முயற்சியின் மூலமும் தேசத்தில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர்களின் வாழ்க்கைத் தத்துவம் நம்மை ஊக்குவிக்கிறது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் மற்றும் நானாஜி தேஷ்முக் அவர்கள் ஆகியோரை வணங்கி எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

இந்திய விண்வெளி சங்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

October 11th, 11:18 am

இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

1975 நெருக்கடி நிலை, நம் ஜனநாயகத்தின் கருப்பு இரவு: மன் கி பாத்-ல் பிரதமர் மோடி

June 25th, 12:21 pm

ஜுன் 1975ல், பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்திய ஜனநாயக வரலாற்றின் கறுப்பு இரவு என்று மன் கி பாத்-ல் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும், குரல் எழுப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறித்தும் விரிவாக பேசினார். சுத்தம், சமீபத்தில் நிறைவடைந்த சர்வதேச மூன்றாவது யோகா தினம், விண்வெளி விஞ்ஞானம் மற்றும் விளையாட்டின் வலிமை போன்றவற்றை வலியுறுத்தி பேசினார்.