1.5 லட்சம் ஆரோக்கிய மையங்களின் உருவாக்கம் என்ற இலக்கை அடைந்ததற்கு பிரதமர் பாராட்டு

December 29th, 09:00 pm

1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத்- சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டு, இலக்கு எட்டப்பட்டிருப்பது, புதிய இந்தியாவில், புதிய ஆற்றலை புகுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளம் என்பது ஆரோக்கியமான குடிமக்களை சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

200 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற எண்ணிக்கை கடந்ததற்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

July 17th, 01:24 pm

அறிவியல் மீது அபாரமான நம்பிக்கை கொண்டிருந்து, 200 கோடி கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் என்ற சிறப்பு எண்ணிக்கை கடந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களைப் பாராட்டியுள்ளார். இந்தத் திட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோரின் உணர்வையும், அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

இன்றைய அமைச்சரவையின் முடிவு, இந்தியாவின் தடுப்பூசி வழங்கலை மேம்படுத்தி, சுகாதாரமான நாட்டை உருவாக்கும்: பிரதமர்

July 13th, 10:52 pm

ஜூலை 15, 2022 முதல் அடுத்த 75 நாட்களுக்கு அரசு மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை டோசை இலவசமாக வழங்கும் முடிவு, இந்தியாவின் தடுப்பூசி வழங்கலை மேம்படுத்தி, சுகாதாரமான நாட்டை உருவாக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

January 19th, 10:01 am

15-18-க்கு இடைபட்ட வயதுள்ள இளையோரில் 50% பேர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தியிருப்பதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.