மலையாள மனோரமா செய்தி மாநாடு 2019-ல் பிரதமர் ஆற்றிய உரை

August 30th, 10:01 am

மலையாள மனோரமா செய்தி மாநாடு 2019-ல் உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேரளாவின் புண்ணிய பூமிக்கும், அதன் தனித்துவமான கலாச்சாரத்துக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். இது ஆன்மிக மற்றும் சமூக ஞானம் கொண்ட பூமி. ஆதிசங்கரர், மகாத்மா அய்யன்காளி, ஸ்ரீ நாராயண குரு, சட்டாம்பி சுவாமிகள், பண்டிட் கருப்பன், துறவி குரியகோஸ் இலியாஸ் சவாரா, துறவி அல்போன்சோ மற்றும் பிற மகான்களைத் தந்த பூமி இது. தனிப்பட்ட முறையில் எனக்கும் கேரளா விசேஷமானது. கேரளாவுக்கு வருவதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. மக்கள் எனக்கு மீண்டும் ஆசி வழங்கிய பிறகு பெரிய பொறுப்புடன் நான் முதலில் செய்த விஷயங்களில் ஒன்று குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்துக்குச் சென்றது தான்.

மலையாள மனோரமா நாளிதழின் 2019-ம் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

August 30th, 10:00 am

கொச்சியில் நடைபெற்ற மலையாள மனோரமா நாளிதழின் 2019-ம் ஆண்டிற்கான கூட்டத்தில் காணொலி வழியாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

பிரதமர் நாளை 2019 மனோரமா செய்தி மாநாட்டில் உரையாற்றுவார்

August 29th, 06:21 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாளை அதாவது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி அன்று காலை 10.00 மணிக்கு காணொலி மூலமாக மனோரமா செய்தி மாநாட்டில் உரையாற்றுவார். கொச்சியில் நடைபெறும் இம்மாநாட்டை மலையாள மனோரமா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.