மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
February 23rd, 11:14 am
மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மனோகர் ஜோஷி 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மக்களவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மகாராஷ்டிர முதலமைச்சராக பதவி வகித்த மனோகர் ஜோஷி மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்ததாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களவைத் தலைவராக மனோகர் ஜோஷி பதவி வகித்த காலத்தில், நமது நாடாளுமன்ற நடைமுறைகளை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்ற பாடுபட்டார் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.