PM meets Jonas Masetti and team, lauds him for his passion towards Vedanta and the Gita
November 20th, 07:54 am
Lauding Jonas Masetti for his passion towards Vedanta and the Gita, the Prime Minister Narendra Modi remarked that it was commendable how Indian culture is making an impact all over the world. The PM met Jonas Masetti and team after seeing their performance of the Ramayan in Sanskrit. Earlier, the PM had mentioned Masetti during one of the #MannKiBaat programmes.பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
November 05th, 01:28 pm
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் நவம்பர் 24,ஞாயிற்றுக்கிழமையன்று, அவரதுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
October 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.27 அக்டோபர் 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்
October 26th, 09:30 am
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி பயன்பாட்டில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
October 05th, 04:49 pm
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 27, ஞாயிற்றுக்கிழமை 'மன் கீ பாத்' (மனதின் குரல்) பகிர்ந்து கொள்கிறார். உங்களிடம் புதுமையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் இருந்தால், அதை நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள இதோ ஒரு வாய்ப்பு. சில பரிந்துரைகளை பிரதமர் தனது உரையின் போது குறிப்பிடுவார்.மனதின் குரல் நிகழ்ச்சியில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் தூய்மையும் அடங்கும்: பிரதமர்
October 02nd, 05:56 pm
மனதின் குரல் நிகழ்ச்சியில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் தூய்மையும் ஒன்றாக உள்ளது என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 10:15 am
இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
October 02nd, 10:10 am
தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.''மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி
September 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.செப்டம்பர் 29, 2024 அன்று ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தைக் கேட்க டியூன் செய்யவும்
September 28th, 09:30 am
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
September 05th, 04:06 pm
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் செப்டம்பர் 29,ஞாயிற்றுக்கிழமையன்று, கருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)
August 25th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.ஆகஸ்ட் 25, 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்
August 24th, 10:00 am
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
August 05th, 02:28 pm
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 25,ஞாயிற்றுக்கிழமையன்று, கருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!28 ஜூலை 2024 அன்று ‘மன் கீ பாத்’தை (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்
July 27th, 09:30 am
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.ஜூன் 30, 2024 அன்று ‘மன் கீ பாத்தை’ (மனதின் குரல்) கேட்க டியூன் செய்யவும்
June 29th, 11:00 am
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 'மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பல முக்கிய விஷயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். நரேந்திர மோடி-ஆப்பில் 'மன் கீ பாத்’ (மனதின் குரல்)நேரலை கேட்க டியூன் செய்யுங்கள்.பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
June 15th, 07:50 pm
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் ஜூன் 30,ஞாயிற்றுக்கிழமையன்று, கருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால், நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.J&K is not just a place, it is the head of India: PM Modi
March 07th, 12:20 pm
PM Modi addressed the Viksit Bharat Viksit Jammu Kashmir programme in Srinagar. “Jammu & Kashmir is breathing freely today, hence achieving new heights”, the Prime Minister said noting the abrogation of Article 370 which has led to the respect of the youth’s talent and equal rights and equal opportunities for everyone.