நமது கிராமங்களில் ஏற்படும் மாற்றம் இந்தியாவின் மாற்றத்தை உறுதி படுத்தும்: பிரதமர் மோடி
April 24th, 01:47 pm
தேசிய கிராமச் சுயாட்சி இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசம் மண்டலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் ஊரக வளர்ச்சி பற்றிப் பேசுகையில் வரவுசெலவுக் கணக்குகள் மிகவும் முக்கியம் என்று மக்களிடம் பிரதமர் கூறினார்.தேசியக் கிராமச் சுயாட்சி இயக்கத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்; பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டபாதையையும் தொடங்கிவைத்தார்
April 24th, 01:40 pm
ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான் – தேசிய கிராமச் சுயாட்சி இயக்கத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசம் மண்டலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடுத்த ஐந்து ஆண்டு திட்டபாதையைத் தொடங்கிவைத்தார்.பஞ்சாயத்து ராஜ் தினமான நாளை, மத்திய பிரதேசம் செல்லும் பிரதமர், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்
April 23rd, 05:35 pm
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 அன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லா செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை (ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான்) தொடங்கி வைக்கும் பிரதமர், மாண்ட்லாவிலிருந்தே நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளுடன் உரையாற்றுகிறார்.