"சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்" என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 18th, 08:00 pm
ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளுக்காக அதிபர் லூலாவை நான் முதலில் பாராட்ட விரும்புகிறேன்.சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த ஜி-20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
November 18th, 07:55 pm
'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் ஜி 20 மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காகவும், சிறப்பான விருந்தோம்பலுக்காகவும் பிரேசில் அதிபர் மேதகு திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட பிரேசிலின் ஜி 20 செயல்திட்டத்தைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை உலகளாவிய தெற்கின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் அழைப்பு ரியோ உரையாடல்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.