வீர பாலகர் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமரின் உரை
December 26th, 04:10 pm
முதலாவது வீர பாலகர் தினத்தை நாடு இன்று அனுசரிக்கிறது. பல தலைமுறையாக நாம் போற்றி வந்த, இந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கான புதிய துவக்கமாக இந்நாள் அமைகிறது. ‘ஷஹீதி சப்தா' மற்றும் வீர பாலகர் தினம் ஆகியவை நமது சீக்கிய பாரம்பரியத்துடன் தொடர்புடைய உணர்வுகள் மட்டுமல்ல, அவை நம்மிடையே எழுச்சியையும் ஊட்டுகின்றன. வீரத்தை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை வீர பாலகர் தினம் நமக்கு நினைவூட்டுகிறது. நாட்டின் கௌரவத்திற்காக சீக்கிய பாரம்பரியத்தில் இடம்பெற்றுள்ள தியாகத்தின் முக்கியத்துவத்தையும் 10 குருமார்களின் பங்களிப்பையும் இந்த தினம் நமக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும். நமது கடந்த காலங்களைப் போற்றிடவும், எதிர்காலத்தைக் கட்டமைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த புனித தினம் நமக்கு ஊக்கமளிக்கிறது.வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
December 26th, 12:35 pm
வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது 300 சிறார்கள் பங்கேற்று சப்த கீர்த்தனைகள் பாடிய நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார். சுமார் 3000 குழந்தைகள் பங்கேற்ற அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். குரு கோபிந்த் சிங்கின் பிரகாஷ் பூரப் தினமான 2022 ஜனவரி 9-ந் தேதி அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், டிசம்பர் 26-ந் தேதி வீர பாலகர் தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா பாபா ஃபதேசிங்கின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.